“இந்த சக்திகள் ஒரு வரம் இல்லை, இதுவொரு சாபம்”: மிரட்டலாக வெளியான ப்ளாக் ஆடம் 2வது ட்ரெய்லர்

வாஷிங்டன்: டுவைன் ஜான்சன் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ப்ளாக் ஆடம்.

டிசி காமிக்ஸ் ரசிகர்களின் மிகிந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ப்ளாக் ஆடம் படம் அக்டோபர் 21ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் ப்ளாக் ஆடம் படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அட்வென்சர்ஸ் ரசிகர்களுக்கு ஆக்சன் ட்ரீட்

அட்வென்சர்ஸ் ரசிகர்களுக்கு ஆக்சன் ட்ரீட்

ஹாலிவுட்டில் வெளியாகும் ஆக்சன் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக டிசி காமிக்ஸ், மார்வெள் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் சூப்பர் ஹீரோ படங்களுக்கு இருக்கும் வரவேற்பு பற்றி சொல்லவே வேண்டாம். டிசி யுனிவர்ஸில் தி ராக் எனப்படும் டுவைன் ஜான்சன் இணைந்த பிறகு, இந்தப் படங்கள் உலகம் முழுவதும் வெறித்தனமான வசூல் வேட்டை நடத்தி வருகின்றன.

ப்ளாக் ஆடமாக டுவைன் ஜான்சன்

ப்ளாக் ஆடமாக டுவைன் ஜான்சன்

டிசி நிறுவனத்தின் அடுத்த படைப்பாக உருவாகி வரும் படம் ப்ளாக் ஆடம்'. இந்தப் படத்தில் ப்ளாக் ஆடம் கேரக்டரில் டுவைன் ஜான்சன் நடித்துள்ளார். பியர்ஸ் ப்ரோஸ்னன், ஆல்டிஸ் ஹாட்ஜ் உள்ளிட்ட பலரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். பியூ ஃபிளின், டுவைன் ஜான்சன் உள்ளிட்ட நான்கு பேர் தயாரிக்கும் இப்படத்தை ஜாம் கோலெட்-செர்ரா இயக்குகிறார். கடந்த ஆண்டு இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதோடு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

வெளியானது ப்ளாக் ஆடம் 2வது ட்ரெய்லர்

வெளியானது ப்ளாக் ஆடம் 2வது ட்ரெய்லர்

இந்நிலையில் ப்ளாக் ஆடம் படத்தின் முதல் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது 2வது ட்ரெய்லரையும் வார்னர்ஸ் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.. ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு, அக்டோபர் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஹீரோவும் இருக்காங்க வில்லன்களும் இருக்காங்க

ஹீரோவும் இருக்காங்க வில்லன்களும் இருக்காங்க

டுவைன் ஜான்சனின் வாய்ஸ் ஓவரில் "ஹீரோஸ் இருக்காங்க, வில்லன்கள் இருக்காங்க" என்ற கேப்ஷனுடன் வெளியான 2வது ட்ரெய்லர், ஆக்சனில் மிரட்டுகிறது. தனது முந்தைய கதைகளை கூறியபடி ட்ரெய்லர் தொடங்குகிறது. மேலும், "இந்த சக்திகள் ஒரு வரம் இல்லை, இதுவொரு சாபம்" என்ற வசனம், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அவதாரம் எடுத்துள்ள ப்ளாக் ஆடம், இந்த உலகை அழிக்கப் போகிறானா இல்லை காப்பாற்ற போகிறானா என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X