ஜெயிலர் படத்தின் ஓப்பனிங் சாங்.. அடடா மாஸ் தகவலா இருக்கே

சென்னை: ஜெயிலர் படத்தின் ஓப்பனிங் பாடல் குறித்த தகவல் வெளியாகி ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மூன்றாவது முறையாக ரஜினி படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

கட்டாயத்தில் இருக்கும் ரஜினிகாந்த்

கட்டாயத்தில் இருக்கும் ரஜினிகாந்த்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்த தர்பார் படத்தையும், சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த படத்தையும் ரஜினிகாந்த் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் இரண்டு படங்களும் அவரை ஏமாற்றிவிட்டன. சிவாவுக்கு அவர் தங்க சங்கிலி பரிசளித்தாலும் சிவா மூலம் அஜித்துக்கு கிடைத்த மாஸ் ஹிட் ரஜினிக்கு கிடைக்கவில்லை. இதனால் ரொம்பவே அப்செட்டில் இருந்தாராம் ரஜினிகாந்த். இதனையடுத்துதான் இளம் இயக்குநருடன் இணையலாம் என முடிவு செய்து நெல்சனுடன் கை கோர்த்தார்.

நிரூபிப்பாரா நெல்சன் திலீப்குமார்

நிரூபிப்பாரா நெல்சன் திலீப்குமார்

கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் மூன்றாவது படமாக விஜய்யை வைத்து பீஸ்ட் இயக்கினார். முதல் இரண்டு படங்கள் போலவே அந்தப் படமும் ஹிட் ஆகும் என எதிர்பார்த்திருந்த நெல்சனுக்கு பலத்த அடி விழுந்தது. குறிப்பாக சமூக வலைதளங்களில் பலரும் அவரை ட்ரோல் மெட்டீரியலாக மாற்றினர். இப்படிப்பட்ட சூழலில்தான் ரஜினியை இயக்க ஒப்பந்தமானார் நெல்சன். எனவே விஜய்யிடம் விட்டதை ரஜினியை வைத்து பிடித்து மீண்டும் தன்னை நிரூபிக்க காத்திருக்கிறார் நெல்ச்ன திலீப்குமார்.

ரஜினி கொடுத்த ஐடியா?

ரஜினி கொடுத்த ஐடியா?

பீஸ்ட் படத்தின் தோல்வியால் ரஜினிகாந்த் நெல்சன் மீது நம்பிக்கை இழந்துவிட்டார் எனவும், ஒருகட்டத்தில் அவரை படத்திலிருந்து தூக்குவதற்கு தயாராகிவிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், ஒருவழியாக ஜெயிலர் படத்துக்கு நெல்சனே இயக்குநராக இறுதி செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி படத்தை பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக்குவதும், அதற்காக பல மொழிகளில் இருந்தும் ஸ்டார்களை களம் இறக்குவதும் என ரஜினிகாந்த் ஐடியா கொடுத்தாராம். அதன்படிதான், மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் என நட்சத்திர பட்டாளம் களமிறக்கப்பட்டதாகவும் ஒரு பேச்சு ஓடிக்க்கொண்டிருக்கிறது.

விறுவிறுப்பாக நடக்கும் ஜெயிலர் ஷூட்டிங்

விறுவிறுப்பாக நடக்கும் ஜெயிலர் ஷூட்டிங்

ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கி மங்களூரு உள்ளிட்ட இடங்களில் நடந்துவந்தது. தற்போது அதன் ஷூட்டிங் கொச்சினில் நடக்கிறது. இதுதான் படத்தின் இறுதி ஷெட்யூல் என கூறப்படுகிறது. படமானது முதலில் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் கசிந்த சூழலில் தற்போது படமானது ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓப்பனிங் சாங்

ஓப்பனிங் சாங்


இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ஓப்பனிங் சாங் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி, ஓப்பனிங் பாடலில் ரஜினியுடன் மொத்தம் 200 டான்ஸர்கள் ஆடவிருக்கின்றனராம். அந்தப் பாடல் முழுக்க முழுக்க ஜெயிலுக்குள்ளேயே படமாக்கப்பட்டிருப்பதாகவும், அந்தப் பாடலைத்தான் படத்திலிருந்து முதல் சிங்கிளாகவும், லிரிக்கல் வீடியோவாகவும் படக்குழு வெளியிட இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. பேட்ட, தர்பார் போன்ற படங்களில் ரஜினிக்கு அனிருத் அமைத்த தீம் மியூசிக்கும், பாடல்களும் ஹிட்டாகின. எனவே இந்த முறையும் பாடல்கள் ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பில் அனிருத் ரசிகர்களும், ரஜினிகாந்த் ரசிகர்களும் இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X