Bigg Boss 7 - அடுத்தடுத்து ட்விஸ்ட் அடிக்கும் பிக்பாஸ்.. முதல் வாரமே 2 நாமினேஷன்கள்.. யார் அவுட் தெரியுமா?
சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) பிக்பாஸ் ஏழாவது சீசனில் அடுத்தடுத்து ட்விஸ்ட் வந்துகொண்டே இருக்கிறது. அதன்படி முதல் வாரமே இரண்டு நாமினேஷன் ப்ராசஸ் ஆரம்பித்திருக்கிறது.
தமிழ்நாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசன்கள் முடிவடைந்திருக்கின்றன. இந்த சூழலில் நேற்று முதல் ஏழாவது சீசன் தொடங்கியிருக்கிறது. எப்போதும் இல்லாத மாதிரி இந்த சீசன் இரண்டு வீடுகளில் நடக்கிறது. பிக்பாஸ் வீடு, ஸ்மால் பாஸ் வீடு என்று வீடுகள் அழைக்கப்படுகின்றன.

போட்டியாளர்கள்: கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா, விசித்திரா, மணிசந்திரா, விஷ்ணு விஜய், ஐஷு, அனன்யா ராவ், பவா செல்லதுரை, ஜோவிகா விஜயகுமார், யுகேந்திரன், சரவண விக்ரம், விஜய் வர்மா, மாயா, அக்ஷயா உதயகுமார் ஆகிய 18 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கின்றன. இந்த சீசனில் பிரபலமான முகங்கள் இல்லையே என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
ஆரம்பமே ட்விஸ்ட்: இரண்டு வீடுகளில் பிக்பாஸ் நடக்கப்போவதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து அது எப்படி நடக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர். மேலும், 18 போட்டியாளர்களில் பாதி பேர் ஒரு வீட்டிலும் மீதி பேர் இன்னொரு வீட்டிலும் இருப்பார்கள் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் கேப்டனை கவராத ஆறு பேரை ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்தார் பிக்பாஸ்.

யார் அந்த ஆறு பேர்: அதன்படி, பவா செல்லதுரை, நிக்ஸன், அக்ஷயா, ரவீனா, ஆயிஷா, வினுஷா ஆகிய ஆறு பேர் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு சென்றனர். அவர்களுக்கான ரூல்ஸ்படி, யாரும் அந்த வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது; பாத்ரூம் க்ளினிங்கை அவர்கள்தான் செய்ய வேனும்; பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சமைப்பதைத்தான் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.
நாமினேஷன்: இந்நிலையில் பிக்பாஸ் அடுத்த ட்விஸ்ட்டை அடித்திருக்கிறார். அதாவது இதுவரை இல்லாத அளவு முதல் வாரமே இரண்டு நாமிஷேன்களை செய்ய சொல்லியிருக்கிறார். அதாவது பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் இரண்டு பேரை நாமினேட் செய்ய வேண்டும்; அதேபோல் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களையும் நாமினேட் செய்ய வேண்டும்.

பவா செல்லத்துரை: அதன்படி முதல் ஆளாக கன்ஃபெஷன் ரூமுக்குள் சென்ற கூல் சுரேஷ் பவா செல்லத்துரையையும், ஐஷுவையும் நாமினேட் செய்தார். பவா செல்லத்துரையை நாமினேட் செய்தபோது அவர் ரொம்பவே மூத்தவராக இருக்கிறார் அவரால் மற்றவர்களுடன் ஜெல் ஆக முடியவில்லை என்று காரணம் கூறிய சுரேஷ்; ஐஷுவுக்கு மொழி பிரச்னை இருக்கிறது அதனால் அவராலும் ஜெல் ஆக முடியவில்லை என்றார். அவரைத் தொடர்ந்து வந்த பூர்ணிமாவும் ஐஷுவை நாமினேட் செய்தார். தொடர்ந்து மணிச்சந்திராவும் பவா செல்லத்துரையை நாமினேட் செய்தார். அவரும் பவாவின் வயதையே காரணமாக காட்டினார்.
முதல் வாரமே இப்படி நாமினேஷன் ப்ராசஸ் களைகட்டியிருப்பதால் யார் முதலில் வீட்டிலிருந்து வெளியே வருவார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தொடர்ந்து பலரும் பவா செல்லத்துரையை வயது காரணம் காட்டுவதால் அநேகமாக அவர் முதல் ஆளாக வெளியே வரலாம் அல்லது ஐஷு வெளியே வரலாம் என்றும் ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











