The Odyssey: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் குறைந்த டிக்கெட் கட்டணம்.. ரசிகர்களுக்கு குட் நியூஸ்!

சென்னை: ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் மிகவும் எதிர்பார்க்கப்படும் 'தி ஓடிஸி' (The Odyssey) திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு பல நகரங்களில் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவின் முக்கிய மெட்ரோ நகரங்களுடன் ஒப்பிடும்போது சென்னையில் தான் மிகவும் குறைந்த கட்டணத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன என்ற தகவல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கிடைத்துள்ள தகவலின்படி, சென்னை மற்றும் கோவையில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.508.34 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாடு அரசின் டிக்கெட் கட்டண உச்சவரம்பு நடைமுறையே என கூறப்படுகிறது. இதனால் எந்த காட்சியாக இருந்தாலும், எந்த வகை இருக்கையாக இருந்தாலும், 'ஃப்ளெக்ஸி பிரைசிங்' முறை இங்கு அமல்படுத்தப்படுவதில்லை.

The Odyssey Tickets Cheapest in Tamil Nadu Chennai Offers Lowest Prices Among India s Metro Cities

மற்ற மெட்ரோ நகரங்களைப் பொறுத்தவரை, டெல்லியில் ரூ.800 முதல் ரூ.2,500 வரை, மும்பையில் ரூ.900 முதல் ரூ.3,100 வரை, கொல்கத்தாவில் ரூ.900 முதல் ரூ.1,240 வரை, பெங்களூருவில் ரூ.900 முதல் ரூ.2,000 வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காட்சி நேரம் மற்றும் சாதாரண இருக்கை முதல் ரிக்ளைனர் இருக்கை வரை உள்ள வசதிகளைப் பொறுத்து இந்த கட்டணம் மாறுபடுகிறது.

ஆனால் தமிழ்நாட்டில் அரசின் கட்டண கட்டுப்பாடு காரணமாக, 'ஃப்ளெக்ஸி பிரைசிங்' முறை இல்லாததால் ரசிகர்கள் ஒரே மாதிரியான கட்டணத்தில் படத்தை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இதனால், இந்தியாவின் முக்கிய மெட்ரோ நகரங்களில் மிகக் குறைந்த டிக்கெட் விலையில் 'தி ஓடிஸி' திரைப்படத்தை பார்க்கக்கூடிய நகரம் சென்னைதான் என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

The Odyssey Tickets Cheapest in Tamil Nadu Chennai Offers Lowest Prices Among India s Metro Cities

சென்சார்: நோலனின் படங்களுக்கு இந்தியாவில் எப்போதும் தனி வரவேற்பு இருப்பதால், முன்பதிவு தொடங்கியுள்ள பல நகரங்களில் டிக்கெட்டுகள் வேகமாக விற்று வருவதாகவும், குறிப்பாக தமிழ்நாட்டில் குறைந்த கட்டணத்தில் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே, மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) தி ஒடிஸி திரைப்படத்திற்கு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது. அதேநேரம் படத்தின் மொத்த ரன்டைம் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் 33 விநாடிகள் என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X