ஆர்ஜே பாலாஜி எடுத்த அதிரடி முடிவு… பிரம்மாண்டமாக உருவாகும் அடுத்த மல்டி ஸ்டார்ஸ் மூவி
சென்னை: ரேடியோ ஜாக்கியாக பிரபலமான ஆர்ஜே பாலாஜி, இப்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து காமெடி அட்ராசிட்டி செய்த ஆர்ஜே பாலாஜி, மூக்குத்தி அம்மன், எல்கேஜி, வீட்ல விசேஷங்க ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.
ஆர்ஜே பாலாஜி விஜய்க்கு கதையுடன் காத்திருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அவரது அடுத்த படம் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது.

ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படம்
ரேடியோ ஜாக்கியாக பிரபலமான ஆர்ஜே பாலாஜி, இப்போது சினிமாவிலும் பிசியாக நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் சேர்ந்து காமெடியில் கலக்கிய ஆர்ஜே பாலாஜி, அதன்பின்னர் எல்கேஜி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா லீடிங் கேரக்டரில் நடித்த மூக்குத்தி அம்மன் சூப்பர் ஹிட் அடித்தது. இதனால் கோலிவுட்டில் சக்சஸ்புல் இயக்குநராக கெத்து காட்டினார் ஆர்ஜே பாலாஜி.

இதுதான் புதிய முடிவு
எல்கேஜி, மூக்குத்தி அம்மன் என சூப்பர் ஹிட் கொடுத்த ஆர்ஜே பாலாஜி சமீபத்தில் வீட்ல விசேஷங்க படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்தப் படத்தில் சரவணனுடன் இணைந்து இயக்குநராக வேலைப் பார்த்தார். இதனிடையே சமீபத்தில் விஜய்யை சந்தித்து கதை கூறியிருந்த ஆர்ஜே பாலாஜி, விரைவில் அவருடன் இணைவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில், திடீரென இயக்குநராக இல்லாமல் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். கோகுல் இயக்கும் இந்தப் படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

மல்டி ஸ்டார்ஸ் படம்
ஆர்ஜே பாலாஜி நடிக்கும் இந்தப் படத்திற்கு சிங்கப்பூர் சலூன் என டைட்டில் உறுதியாகியுள்ளது. மேலும், இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். அதேநேரம் ஆர்ஜே பாலாஜி நடிக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தில் லோகேஷ் கனகராஜும் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் லோகேஷ் கனராஜ் இயக்குநராகவே கேமியோ அப்பீரியன்ஸ் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆர்ஜே பாலாஜியுடன் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

கோடையில் கட்டிங் ஷேவிங்
ரெளத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா ஆகிய படங்களை இயக்கியுள்ள கோகுல், சிங்கப்பூர் சலூன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் சத்தமே இல்லாமல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தை அடுத்தாண்டு ஏப்ரலில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதுவரை இயக்குநராகவே மட்டுமே வலம் வரும் லோகேஷ், முதன்முறையாக நடிகராக களமிறங்குவதால், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மேலும், ஆர்ஜே பாலாஜி - கோகுல் காம்போ சிங்கப்பூர் சலூன் படத்தை கமர்சியலாக செம்ம எண்டர்டெயின்மெண்ட்டாக கொடுப்பார்கள் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











