இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டுமா?.. ஏகே 62வுக்கு என்னதான் ஆச்சு

சென்னை: ஏகே 62 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.

ஹெச்.வினோத் - அஜித் - போனிகபூர் கூட்டணியில் உருவான நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து அதே கூட்டணியில் துணிவு படம் உருவானது. இதில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

வசூலை குவித்த துணிவு

வசூலை குவித்த துணிவு

பெரும் எதிர்பார்ப்போடு வாரிசு படத்துக்கு போட்டியாக களமிறங்கியது வாரிசு. நீண்ட வருடங்கள் கழித்து அஜித்தும் விஜய்யும் ஒரே நாளில் தங்களது படங்களை களமிறக்கியதால் யார் வெல்லப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இந்தப் போட்டியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் துணிவு படமே வென்றிருப்பதாக திரையுலகில் பேச்சு எழுந்தது. துணிவு படம் 300 கோடி ரூபாய்க்கும் அதிகம் வசூலித்ததாகவும் கூறப்பட்டது.

ஏகே 62வில் கமிட்டான அஜித்

ஏகே 62வில் கமிட்டான அஜித்

துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பார் எனவும், லைகா நிறுவனம் தயாரிக்கும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் திடீரென விக்னேஷ் சிவன் அந்தப் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இது திரையுலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. விக்னேஷ் சிவனை நம்பவைத்து அஜித் ஏமாற்றிவிட்டார் என ஒரு தரப்பினர் வெளிப்படையாகவே பேசினர்.

ஏகே 62வை இயக்கும் மகிழ் திருமேனி

ஏகே 62வை இயக்கும் மகிழ் திருமேனி

இதனையடுத்து அஜித் 62ஆவது படத்தை யார் இயக்கவிருக்கிறார் என்ற கேள்வியே அனைவரிடமும் எழுந்தது. தொடர்ந்து ஏகே 62 படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவார் என கூறப்படுகிறது. அனிருத் இசையமைப்பார் என்றும், நீர்வ ஷா ஒளிப்பதிவு செய்வார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் பல மாதங்கள் ஆகியும் படம் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இன்னும் சில வாரங்களில் ஏகே 62 அப்டேட்?

இன்னும் சில வாரங்களில் ஏகே 62 அப்டேட்?

இதோ வந்துவிடும் அதோ வந்துவிடும் என ஏகே 62 அறிவிப்புக்கு ஏங்கிக்கொண்டிருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். ஆனால் அவர்களுக்கு தொடர்ச்சியாக ஏமாற்றமே கிடைத்து வருகிறது. சமீபத்தில் லைகாவிலிருந்து வந்த அறிவிப்பும் ரஜினி படம் தொடர்பாக அமைந்துவிட்டது. இந்நிலையில் எப்போதுதான் ஏகே 62 அறிவிப்பு வரும் என தீவிரமாகவே கேட்க ஆரம்பித்துவிட்டனர் அஜித் ரசிகர்கள். இந்தச் சூழலில் படம் குறித்த அறிவிப்பு வெளியாக இன்னும் சில வாரங்கள் ஆகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அறிவிப்புக்கு ஏன் தாமதம்?

அறிவிப்புக்கு ஏன் தாமதம்?

லியோ படம் போலவே ப்ரோமோவுடன் இந்தப் படத்தின் அறிவிப்பை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான பணிகளில் மகிழ் திருமேனி மும்முரமாக இருக்கிறார். படத்தின் அறிவிப்பையே மாஸாக வெளியிட வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் இவ்வளவு தாமதம் ஆவதாக திரையுலகினர் கூறிவருகின்ற்னார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X