கர்நாடகத்தை சூறையாடும் கொரோனா.. கன்னட பிக் பாஸ் பாதியிலேயே நிறுத்தம்!

பெங்களூரு : நாடு முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக பல மொழிகளிலும் படப்பிடிப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பல முன்னணி நடிகர்களின் படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையை சேர்ந்த பலரும் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 8 பாதியில் நிறுத்தம்

பிக்பாஸ் சீசன் 8 பாதியில் நிறுத்தம்

அதிகரித்து வரும் கொரோனா பரவலால் கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தீவிரமடைந்து வரும் கொரோனா பரவலை மனதில் கொண்டு கன்னட மொழியில் நடத்தப்பட்டு வந்த பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

70 நாட்களை முடித்த பிக்பாஸ்

70 நாட்களை முடித்த பிக்பாஸ்

பிப்ரவரி 28 ம் தேதி துவங்கிய இந்த நிகழ்ச்சி ஏற்கனவே 70 நாட்களை நிறைவு செய்து விட்டது. இந்நிகழ்ச்சியை நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் சேனலின் தலைவர் பரமேஸ்வர் குண்ட்கல், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிக்கப்படுவதாக தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

11 போட்டியாளர்கள்

11 போட்டியாளர்கள்

அதில் அவர், இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் 71 வது நாள். தற்போது 11 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். கனமழை உள்ளிட்ட பல சவால்களை இந்நிகழ்ச்சி சந்தித்து விட்டது. ஆனாலும் வெளியில் உள்ள மோசமான, சவாலான சூழல் தெரியாமல் அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் மகிழ்ச்சியாக உள்ளனர். அவர்கள் தனிமையில் இருப்பது அவர்களுக்கு பாதுகாப்பு தான்.

நாளை வீட்டிற்கு அனுப்புகிறோம்

நாளை வீட்டிற்கு அனுப்புகிறோம்

இங்கு என்ன நடக்கிறது என வெளியில் இருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். போட்டியாளர்களிடம் பேசி, அவர்களை பத்திரமாக நாளை வீட்டிற்கு அனுப்பி வைக்க உள்ளோம். 100 நாட்கள் பணி. நூற்றுக்கணக்கானவர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த அணியின் கனவு பாதியில் நிறுத்தப்படுகிறது. இது கடினமான முடிவு தான்.

கனத்த இதயத்துடன் நிறுத்தம்

கனத்த இதயத்துடன் நிறுத்தம்

இதயம் கனக்கிறது. இந்த நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்படுவதை நினைத்து யாரும் கவலைப்பட வேண்டாம். வேறு எந்த பிரச்சனையும் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், வெளியில் பார்த்துக் கொண்டிருப்பவர்களின் மனநிலை மற்றும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்நிகழ்ச்சியை நிறுத்துகிறோம். பாதுகாப்பாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X