கொரோனா விழிப்புணர்வு பாடல்... இசையமைத்து பாடிய பாடகர் கிருஷ்... சிறிய பங்களிப்பு என உருக்கம்
சென்னை : கொரோனா தாக்கம் குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திரைத்துறை நட்சத்திரங்கள் சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி, சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டனர்.
இதனிடையே, பாடகர் கிருஷ் கொரோனா விழிப்புணர்வு பாடலை இசையமைத்து பாடி வெளியிட்டுள்ளார்.

முழு லாக்டவுன்
கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததையடுத்து இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும் வரும் 7ம் தேதிவரை முழு லாக்டவுனை நீட்டித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் சிறிது மட்டுப் பட்டுள்ளது.
Recommended Video

முதல்வர் விழிப்புணர்வு வீடியோ
கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும்வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டார். மாஸ்க் அணியும்படி வலியுறுத்தினார். இந்த வீடியோ பல்வேறு தரப்பினரின் வரவேற்பை பெற்றுள்ளது.

விழிப்புணர்வு வீடியோக்கள்
தொடர்ந்து திரைத்துறையினரை கொண்டு பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிடப்பட்டன. நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி, சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் கொரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் வீடியோக்களில் பேசி அதனை வெளியிட்டனர்.
கொரோனா தடுப்பூசிக்கு எனது சிறிய பங்களிப்பு. தடுப்பூசி விழிப்புணர்வு பாடல். கொரோனா பரவலை நிறுத்த ஒரே வழி.... தடுப்பூசி..🙏
— KRISHH (krishoffl) May 31, 2021
The Only Solution to End this Pandemic Is to Get Vaccinated.#GetVaccinatedmkstalin Udhaystalin pic.twitter.com/r1wjPL5qiX
இசையமைத்து பாடிய க்ருஷ்
இந்நிலையில் பாடகர் கிருஷ் தற்போது கொரோனா குறித்த விழிப்புணர்வு பாடலுக்கு இசையமைத்து பாடியுள்ளார். இந்த பாடலுக்கான வரிகளை டாக்டர் ஆர். சிவகுமார் ஐபிஎஸ் எழுதியுள்ளார். ஆர் ராஹேஷ் இயக்கியுள்ளார். ராம் கோபி எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். எல்ஆர் ஜெகதீஷ் தயாரித்துள்ளார். இந்த வீடியோவை க்ருஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சிறிய பங்களிப்பு எனவும் உருக்கம் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போடும் வீடியோக்கள்
தமிழக முதல்வர், நடிகர்கள் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் ஆகியோர் தடுப்பூசி போட்டுக் கொண்ட வீடியோக்கள் இந்த பாடல் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மேலும் நல்லா இருக்கணும் என்று துவங்கும் இந்த பாடலில் பல்வேறு பாசிட்டிவ்வான நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வீடியோவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











