twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரையுலக ஸ்ட்ரைக் கடந்து வந்த பாதை.. சிக்கல்களும்.. சர்ச்சைகளும்! #TamilCinemaStrike

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    தயாரிப்பாளர் சங்கம் கூட்டம்...விஷாலின் முடிவு தான் என்ன? - வீடியோ

    சென்னை : கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் தமிழ் திரையுலகினர் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். க்யூப், யு.எஃப்.ஓ டிஜிட்டல் ஒளிபரப்பு கட்டணம் உயர்வுக்கு எதிராகத் துவங்கிய போராட்டம் முடிவுக்கு வர இருக்கிறது.

    பல்வேறு பிரச்னைகளை உள்ளடக்கி நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது பல்வேறு கட்டமாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    இந்நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து ஸ்ட்ரைக் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த ஸ்ட்ரைக் கடந்து வந்த பாதையைப் பார்ப்போமா?

    பிப்ரவரி 6

    பிப்ரவரி 6

    க்யூப், யு.எஃப்.ஓ கட்டண உயர்வுக்கு எதிராக தெலுங்கு திரையுலகம் சார்பில் மலையாளம், கன்னடம், தமிழ் திரையுலகத் தயாரிப்பாளர்களுக்கு ஸ்ட்ரைக் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, தெலுங்கு சினிமா முன்னெடுக்கும் இந்த ஸ்ட்ரைக்கில் கலந்துகொள்வதாக தென்னிந்திய திரையுலகினர் முடிவெடுத்தனர்.

    பிப்ரவரி 23

    பிப்ரவரி 23

    தியேட்டர்களில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கான கியூப், யுஎஃப்ஓ கட்டணத்தை குறைக்கக் வலியுறுத்தி தமிழ் சினிமா உள்ளிட்ட தென்னிந்திய சினிமா துறையினர் ஸ்ட்ரைக் அறிவித்தினர். மார்ச் 1-ம் தேதி முதல் தென்னிந்தியாவில் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாது என அதிரடியாக அறிவிக்கப்பட்டது.

    மார்ச் 1

    மார்ச் 1

    மார்ச் 1 முதல் சினிமா ஸ்ட்ரைக் நடைபெறத் துவங்கியது. மார்ச் 2 வெள்ளிக்கிழமை அன்று தயாரிப்பாளர் சங்க உத்தரவால் படங்கள் ரிலீஸ் ஆகவில்லை. பவித்ரன் இயக்கி தயாரித்த 'தாராவி' படம் மட்டும் ஸ்ட்ரைக்கை மீறி ரிலீஸ் ஆனது. அது ஸ்ட்ரைக்கிற்கு பாதிப்பை உண்டாக்கவில்லை.

    மார்ச் 5

    மார்ச் 5

    ஐதராபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்கெனவே கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வைக்கப்பட்ட கோரிக்கைகளை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள்.

    மார்ச் 6

    மார்ச் 6

    எதிர்பார்த்த அளவில் சுமூக உடன்படிக்கை ஏற்படாத காரணத்தினாலும், திரையரங்க உரிமையாளர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்ற முடிவினை எடுத்ததாலும், கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை புதிய படங்கள் வெளியிடுவதில்லை என்ற முடிவு தொடரும் என அறிவித்தனர்.

    மார்ச் 8

    மார்ச் 8

    திரையுலகினருக்கும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் டிஜிட்டல் நிறுவனங்கள் 20 சதவீத கட்டணக் குறைப்புக்கு சம்மதித்ததால், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது. 25 கட்டண குறைப்பு வலியுறுத்தி தமிழகத்தில் ஸ்ட்ரைக் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

    மார்ச் 15

    மார்ச் 15

    தியேட்டர்களும் ஸ்ட்ரைக்கில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை மல்ட்டிபிளெக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், "சென்னையில் உள்ள மல்ட்டி பிளக்ஸ் வழக்கம்போல் இயங்கும். நாங்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை" எனத் தெரிவித்தார்.

    மார்ச் 16

    மார்ச் 16

    சென்னையில் நடக்கும் படங்களின் ஷூட்டிங் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. மேலும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெறாது எனவும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் ஷூட்டிங் வேலைகள் மார்ச் 23- ம் தேதி முதல் ரத்து செய்யப்படும் எனவும் உத்தரவிடப்பட்டது. சிறப்பு அனுமதியில் விஜய் படம் உள்ளிட்ட சில படங்களின் ஷூட்டிங் நடைபெற்றது.

    மார்ச் 20

    மார்ச் 20

    தமிழகத்தில் சென்னை தவிர பெரும்பாலான நகரங்களில் திரையரங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்ட நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் சந்தித்துப் பேசி தங்களது கோரிக்கைகளைத் தெரிவித்தனர்.

    மார்ச் 21

    மார்ச் 21

    தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் கலந்துகொண்ட சிம்பு, "நடிகர்களுக்கும் அவர்களது படங்களின் வசூல் உண்மை நிலவரம் தெரிய வேண்டும். அதை தியேட்டர்கள் முறையாகத் தெரிவிக்க வேண்டும். அதைப் பொறுத்து நடிகர்கள் அவர்களது சம்பளத்தை நிர்ணயம் செய்வார்கள்" என பேசினார். இந்தக் கருத்து அனைவராலும் ஆமோதிக்கப்பட்டது.

    மார்ச் 30

    மார்ச் 30

    ஏப்ரல் 4ம் தேதி திரையுலகினர் கலந்துகொள்ளும் பிரமாண்ட பேரணி நடைபெறும் என அறிவித்தனர். பேரணியாகச் சென்று முதல்வரை சந்தித்து கோரிக்கை மனுவை அளிப்போம் எனத் தெரிவித்தார் விஷால்.

    ஏப்ரல் 4

    ஏப்ரல் 4

    திரையுலகினரின் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காவிரி, ஸ்டெர்லைட் போராட்டங்கள் தமிழகம் முழுக்க வலுத்ததால் பேரணி முடிவு கைவிடப்பட்டது. அன்று பேரணி நடைபெறவில்லை.

    ஏப்ரல் 5

    ஏப்ரல் 5

    கார்த்திக் சுப்புராஜ் 'மெர்க்குரி' படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாகக் கூறியதுச் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு, கடும் எதிர்ப்பு எழுந்ததால் ஸ்ட்ரைக் நிறைவடையும் வரை படத்தை வெளியிடமாட்டோம் எனத் தெரிவித்ததால் சர்ச்சை ஓய்ந்தது.

    ஏப்ரல் 7

    ஏப்ரல் 7

    தொழில்நுட்ப சங்கத்தின் பொதுச் செயலாளரான தனபால் என்பவர், ஸ்ட்ரைக் தொடர்ந்தால் விஷால் முன்பு தீக்குளிப்பேன், எனக் கூறியபது திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் விஷால் மீது பல குற்றச்சாட்டுகளையும் கூறினார்.

    ஏப்ரல் 9

    ஏப்ரல் 9

    க்யூப் நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடையாத காரணத்தால் அதிரடியாக, வேறொரு சிறிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது தயாரிப்பாளர் சங்கம். ஏரோக்ஸ் எனும் டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனம் 50% குறைந்த கட்டணத்தில் திரையிட ஒப்புக்கொண்டது.

    ஏப்ரல் 10

    ஏப்ரல் 10

    பல தியேட்டர்களுக்கு டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை வழங்கும் க்யூப் நிறுவனத்தின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர சிறிய டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை வழங்குவோருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு வருகிறது. ஏரோக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்ட தயாரிப்பாளர்கள் சங்கம் அடுத்ததாக மைக்ரோஃப்ளக்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது.

    ஏப்ரல் 11

    ஏப்ரல் 11

    வட இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை வழங்கிவரும் நிறுவனமான கே செரா செரா நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் புதிதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

    ஏப்ரல் 12

    ஏப்ரல் 12

    ஸ்ட்ரைக்கால் நிறைய படங்கள் வெளியீட்டுக்குக் காத்திருக்கும் நிலையில் படங்களை வெளியிட புதிய கொள்கையை பின்பற்ற முடிவு செய்தது தயாரிப்பாளர் சங்கம். அதன்படி, முதலில் சென்சார் சான்றிதழ் பெற்ற படத்துக்கு ரிலீஸில் முன்னுரிமை எனும் முடிவு எடுக்கப்பட்டது. இது தான் இனி எப்போதுமே கடைப்பிடிக்கப்படும் என முடிவானது.

    ஏப்ரல் 15

    ஏப்ரல் 15

    ஸ்ட்ரைக்கை முடிவுக்குக் கொண்டுவர தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்கள் ஆகியவை பங்கேற்றன.

    ஏப்ரல் 17

    ஏப்ரல் 17

    அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, கே.சி.வீரமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து ஸ்ட்ரைக்கை வாபஸ் பெறுவது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் பேசி முடிவு அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்தார்.

    English summary
    The Tamil filmmakers have been on strike since March 1. In this case, after the negotiations, Strike will soon end. The path passed by cinema strike is here.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X