பிரபல ஹீரோவின் நெகிழ்ச்சிக் காதல் கதை... வெப் சீரிஸாக உருவாகிறது... இயக்குனர் தாமிரா தகவல்!

By

சென்னை: வெப் தொடருக்காக நெகிழ்ச்சியான காதல் கதை ஒன்றை இயக்கி வருவதாக இயக்குனர் தாமிரா தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் வெப்சீரிஸ் பக்கம் இப்போது கவனம் திருப்பி வருகின்றனர்.

நடிகைகள் சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலர் வெப் சீரிஸில் நடித்து வருகின்றனர்.

ரெட்டச்சுழி இயக்குனர்

ரெட்டச்சுழி இயக்குனர்

தமிழில் இயக்குனர்கள் வெற்றிமாறன், கவுதவ் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், வெங்கட் பிரபு உட்பட பலர் வெப் தொடர்களை இயக்குகின்றனர். இந்நிலையில் 'தமிழரசன்' இயக்குனர் பாபு யோகேஸ்வரன், எஸ்.பி.பி.சரண் உட்பட பலர் வெப்சீரிஸ்களை இயக்கியுள்ளனர். இவர்கள் வரிசையில் இயக்குனர் தாமிராவும் வெப் சீரிஸை இயக்குகிறார்.

காதல் கதை

காதல் கதை

இவர் பாரதிராஜா, பாலசந்தர் நடித்த ரெட்டச்சுழ', சமுத்திரக்கனி நடித்த ஆண் தேவதை படங்களை இயக்கியவர். இந்தத் தொடரில் நடிகர் சத்யராஜ் ஹீரோவாக நடிக்கிறார். இந்தத் தொடர் பற்றி இயக்குனர் தாமிராவிடம் கேட்டபோது, இது நெகிழ்ச்சியான காதல் கதை. சத்யராஜின் காதல் கதைதான் தொடர் முழுவதும். வித்தியாசமான கதைக் களம். இதுவரை அதிகமான காதல் கதைகள் வந்திருந்தாலும் இதன் ஸ்கிரீன்பிளே வேறுவிதமாக இருக்கும்.

ரக்‌ஷ்ன், வர்சா

ரக்‌ஷ்ன், வர்சா

தொடருக்கு, த பெர்பெக்ட் ஹஸ்பண்ட் என்று டைட்டில் வைத்துள்ளோம். அது ஏன் என்பது தொடரைப் பார்த்தால் புரியும். இதில் சீதா, ரேகா, லிவிங்ஸ்டன், ரக்‌ஷன், வர்சா பெலோமா, 'ரெட்டச்சுழி' ஶ்ரீநிகேதன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஶ்ரீநிகேதன் இள வயது சத்யராஜாக நடிக்கிறார். மொத்தம் 8 எபிசோடுகள். ஹாட்ஸ்டார் தயாரிக்கிறது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் பாக்கி இருக்கிறது என்றார்.

வெப்சீரிஸ் ஆர்வம்

வெப்சீரிஸ் ஆர்வம்

ஏற்கனவே, இந்தியில் லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் தொடர் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. அதை அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் ஆகிய நான்கு பிரபல இயக்குனர்கள் இயக்கி இருந்தனர். இதற்கு வரவேற்பு கிடைத்தது.
பின்னர் இவர்களே கோஸ்ட் ஸ்டோரிஸ் என்ற தொடரை இயக்கி இருந்தனர்.
இந்நிலையில், தமிழிலும் வெப்சீரிஸ் இயக்க இயக்குனர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X