கூட்ட நெரிசலை பயன்படுத்தி அத்துமீறிய நபர்கள்.. ஆத்திரத்தில் கத்திய தமன்னா!
கேரளா: கூட்ட நெரிசலை பயன்படுத்தி அத்துமீறிய ரசிகர்களால் நடிகை தமன்னா டென்ஷனாகி ஆத்திரத்தில் கத்தினார்.
கேடி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை தமன்னா தொடர்ந்து சூர்யா விஜய், அஜித், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

ஜி கர்தா வெப் தொடர்: நடிகை தமன்னா ஜி கர்தா என்ற வெப் தொடரில் நடிகர் சுஹைல் நய்யாருடன், தமன்னா அந்தரங்க காட்சிகளில் நடித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் பலத்த அதிர்ச்சி அடைந்தார்கள். இது சோசியல் மீடியாவில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. அந்த படத்திற்கு அந்த காட்சி தேவையான ஒன்று அதன் காரணமாகவே அந்த காட்சியில் நான் நடித்தேன் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
லஸ்ட் ஸ்டோரிஸ் 2: நடிகை தமன்னா நடிப்பில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்கிற வெப் தொடர் நடித்துள்ளார். இந்த வெப் தொடர் ஜுன் 29ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதில் விஜய் வர்மா, கஜோல் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார் தமன்னா. இந்த வெப் தொடருக்கான புரமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வில் தனக்கு விஜய் வர்மா மீது காதல் வந்ததாக தனது காதலை உறுதிப்படுத்தி உள்ளார்.

கேரளாவில் தமன்னா: இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள லூலூ மாலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை தமன்னா, வெள்ளை நிற உடையில் வந்து கேரள ரசிகர்களை கிறங்கடித்தார். அனைவருக்கும் கை அசைத்து ரசிகர்களின் பல கேள்விகளுக்கும் பதிலளிக்கு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
டென்ஷனான தமன்னா: இதையடுத்து நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுக்க முயன்றனர். அப்போது, ரசிகர்களுடன் சிரித்த முகத்துடன் செல்பி எடுத்து வந்தார். ஆனால் அப்போது கூடி இருந்த ரசிகர்கள் கூட்டத்தை பயன்படுத்தி தமன்னாவை தொடக்கூடாத இடத்தில் தொட்டதாக தெரிகிறது. டென்ஷனான தமன்னா தொடாமல் இருங்கள் என்று அவர்களிடம் சத்தம் போட்டுள்ளார். கூட்டம் அதிகமாக இருந்ததால் தமன்னாவிடம் அத்துமீறி நடந்து கொண்டது யார் என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











