சல்மான்கானை கட்டிப்பிடித்த விஜய் பட பிரபலம்... மீண்டும் பாலிவுட் செல்ல திட்டமா..?
மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் பதான் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
முன்னதாக தெலுங்கில் சிரஞ்சீவியுடன் காட்ஃபாதர் படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்து மாஸ் காட்டியிருந்தார்.
பிக் பாஸ் சீசன் 16 முடிந்துவிட்ட நிலையில், அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் பிஸியாக காணப்படுகிறார்.
இந்நிலையில், சல்மான் கானை ஜானி மாஸ்டர் நேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட போட்டோ ட்ரெண்டாகி வருகிறது.

பதானில் மாஸ் காட்டிய சல்மான் கான்
பாலிவுட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கான் நடிகர்களின் ராஜாங்கம் தான் நடைபெற்று வருகிறது. அமீர் கான், ஷாருக்கான், சல்மான் கான் இவர்கள் மூவருக்கும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். கடந்த மாதம் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்துள்ளது. ஸ்பை திரில்லர் படமாக வெளியான பதானில் சல்மான் கானும் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

சல்மான் கானை சந்தித்த ஜானி மாஸ்டர்
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஷாருக்கான் - சல்மான் கான் இருவரையும் ஸ்க்ரீனில் பார்த்த பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். முன்னதாக தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் கடந்தாண்டு வெளியான காட்ஃபாதர் படத்திலும் சல்மான் கான் நடித்திருந்தார். தற்போது டைகர் 3 உள்ளிட்ட படங்களில் பிஸியாகவுள்ள சல்மான் கான், அடுத்து பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே சல்மான் கானை ஜானி மாஸ்டர் நேரில் சந்தித்துள்ளார். சல்மான் கானை ஜானி மாஸ்டர் கட்டிப் பிடித்து நிற்கும் போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.

மீண்டும் பாலிவுட் திரும்பும் ஜானி மாஸ்டர்
2009 டான்ஸ் மாஸ்டராக என்ட்ரி கொடுத்த ஜானி மாஸ்டர், முதலில் தெலுங்கு படங்களில் தான் பணிபுரிய தொடாங்கினார். அதன்பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற அவர், அங்குள்ள டாப் ஹீரோக்களுக்கு ஸ்டெப்ஸ் போட்டுக்கொடுத்தார். தமிழில் பிரபுதேவாவின் குலேபகாவலி படம் மூலம் அறிமுகமான ஜானி மாஸ்டருக்கு, தனுஷுடன் மாரி 2, பட்டாஸ், திருச்சிற்றம்பலம், விஜய்யுடன் பீஸ்ட், வாரிசு படங்களில் ஸ்மார்ட்டாக கோரியோகிராபி செய்து இன்னும் பிரபலமானார்.

திடீரென சல்மான் கானை சந்திக்க காரணம்
அரபி குத்து, மேகம் கருக்காதா, ரஞ்சிதமே ரஞ்சிதமே என ஜானி மாஸ்டரின் பெயர் சொல்லும் பாடல்கள் தமிழில் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. தொடர்ந்து கோலிவுட், டோலிவுட் பக்கம் பிஸியாக உள்ள ஜானி மாஸ்டர் சல்மான் கானை சந்தித்துள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சல்மான் கான் நடிக்கும் படத்திற்கு ஜானி மாஸ்டர் கோரியோகிராப் செய்கிறாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இதனால் ஜானி மாஸ்டர் மீண்டும் பாலிவுட் பக்கம் ரீ-என்ட்ரி கொடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் இந்தப் போட்டோவை பார்த்த ரசிகர்கள், ஜானி மாஸ்டர் சீன் போட மட்டும் தான் ஓக்கே, மற்றபடி டான்ஸில் அவ்வளவு ஒர்த் இல்லையெனவும் கமெண்ட்ஸ் செய்த் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











