நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் பிளஸ் அண்ட் மைனஸ்... 7ஜி பட ஸ்டைலில் காதல் ரொமான்ஸ்

சென்னை: நடிகர் தனுஷ், பாடகர், லிரிக் ரைட்டர், இயக்குநர் என பன்முகத்திறமையுன் சிறந்து விளங்குகிறார். ராஜ் கிரண் நடித்த 'பவர் பாண்டி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் கடைசியாக இயக்கி, நடித்த 'ராயன்' திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து, அவரது அக்கா மகன் பவிஷை வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கியுள்ளார்.

அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இளைஞர்கள் பட்டாளம் நிறைந்துள்ள இப்படத்தில் காமெடி நிறைந்த காதல் காட்சியாக உள்ளதால் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது NEEK படத்தின் பிளஸ் அண்ட் மைனஸை இங்கு பார்ப்போம்.

NEEK Dhanush Review

செல்வராகவன் பட ரெபரன்ஸ்: NEEK படத்தில் நெஞ்சை கசக்கி கண்ணீரை வரவைக்கும் காட்சிகள் இல்லை. ஒரு ஜாலியான பொழுதுபோக்கு படமாக தனுஷ் இயக்கியுள்ளார். ஆனால், படத்தில் இடம்பெறும் சில காட்சிகள் செல்வராகன் படத்தை ஞாபகப்படுத்துகின்றன. இரவு பார்ட்டியில் மூச்சு முட்ட குடித்துவிட்டு தள்ளாடும் நிலையில் இருக்கும் நிலா (அனிகா சுரேந்திரன்) பிரபுவிடம் (பவிஷ்) டாய்லெட்டில் தனது காதலை சொல்கிறார்.

ஐ லவ் யூ என்று இங்க யாராச்சும் சொல்வாங்களா என பிரபு, நிலாவிடம் கேட்கும் போது சட்டென்று 7ஜி படத்தில் இடம்பெற்ற ஆழமான காதல் காட்சி நினைவில் வந்து செல்கிறது. அதேபோன்று காலனியில் விளையாட்டு போட்டி வைக்கும் போது இடம்பெறும் பாடல் இது என்ன மாற்றம் பாடல் ரசிக்க வைக்கின்றன.

NEEK Dhanush Review

கருவாட்டு குழம்பும் காதலும்: பணக்கார பெண்ணாக இருக்கும் நிலாவுக்கு (அனிகா) அம்மா கிடையாது. தந்தை சரத்குமார் மிகப்பெரிய பிசினஸ் மேன். தந்தை வளர்ப்பில் வளர்ந்ததால், வீட்டு சமையல் என்றால் நிலாவை கையில் பிடிக்க முடியாது, கூச்சப்படாமல் வயிறு முட்ட நன்றாக சாப்பிடுவார். இந்நிலையில், தனது தோழியின் காதலன் வைக்கும் ஆனிவெர்ஸரி பார்ட்டியில் தான் ஹீரோ பிரபுவை Chef ஆக பார்க்கிறார். பிரபுவுக்கு நிலாவை பார்த்ததும் பிடித்து விடுகிறது.

அப்போது, முதல் மரியாதை படத்தில் சிவாஜி ரசித்து ருசித்து சாப்பிடுற மாதிரி கருவாட்டு குழம்பு கிடைக்குமா என பிரபுவிடம் நிலா கேட்க எதிர்பாராத நேரத்தில் மெரினா கடற்கரையில நிலாவுக்கு பிடித்த கருவாட்டு குழம்பை சமைத்து கொடுக்கிறார். நிலா பிரபு மீது காதல் வருகிறது. கொட்டும் மழையில் கருவாட்டு குழம்பு காதல் என ரசனை மிகுந்த காட்சியை இன்னும் ஒருமுறை பார்க்கலாம்.

NEEK Dhanush Review

இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள்: ஹீரோ பிரபு (பவிஷ்) இளையராஜாவின் தீவிர ரசிகன். அவரை பற்றி தவறாக யார் பேசினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார். அப்படி, நிலா இளையராஜாவை விட ஏ.ஆர்.தான் பெஸ்ட் என கூறியதும் கோபத்துடன் கொட்டும் மழையில் நிலாவை இறக்கிவிட்டு செல்கிறார். பின்பு, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் 2 பேருமே பெஸ்ட் தான். உனக்கு ஏ.ஆர்.பிடிக்கும்னா உன்னோட வைத்துக்கொள். பிறரோடு கம்பேர் பண்ண வேண்டாம் என கூறுவது வலைதளத்தில் மோதிக்கொள்ளும் ரசிகர்களுக்கு செருப்படி பதிலாகதான் பார்க்க முடிகிறது. தனுஷ் தீவிரமான இளையராஜா ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே.

நட்பு: நிலா(அனிகா) என் லைஃப்ல இருந்தாலும் இல்லாவிட்டாலும் ராஜேஷ் மாதிரி ஒரு நண்பன் கிடைப்பது கஷ்டம் என பிரபு, அனேகாவிடம் காதல் தோல்வியில் கூறி தவிக்கும் காட்சிகள் கைதட்டலை பெறுகின்றன. மேத்யூ தாமஸின் நடிப்பு பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. ஹீரோவுக்கு நண்பனாக பக்கபலமாக இருக்கிறார். அப்பாவாக வரும் சரத்குமார் தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருப்பார்.

NEEK படத்தில் இருக்கும் மைனஸ்: படம் முழுக்க கலர்புல்லான காதல், காமெடி என வந்து சென்றாலும் லாஜிஸ் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என ரசிகர்கள் புலம்பகின்றனர். தனுஷ் இப்படி ஏமாற்றுவார் என எதிர்பார்க்கவில்லை என வருத்தம் அடைகின்றனர். சிறப்பான 2k கிட்ஸ் காதல் கதையை அழுத்தமாக படைத்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர். கொட்டாவி வரும் அளவிற்கு சில காட்சிகள் இருப்பதாக ட்விட்டரில் கருத்துக்கள் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X