»   »  அன்புச்செழியன் வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சி? போட்டோக்களை கொடுத்து கண்காணிக்கிறது போலீஸ்

அன்புச்செழியன் வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சி? போட்டோக்களை கொடுத்து கண்காணிக்கிறது போலீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பைனான்சியர் அன்புச்செழியன் வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க விமான நிலையங்களில் அவரது போட்டோவை கொடுத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கொடுத்த கடன் தொல்லையால் சசிகுமாரின் மைத்துனரும் தயாரிப்பாளருமான அசோக்குமார் நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக பைனான்சியர் அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

The police are monitoring Anbuchezhiyan at the airport to prevent the escape for the other country

ஆனால் அன்புச்செழியன் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அன்புச்செழியன் வெளிநாடு தப்பிச்செல்லவுள்ளதாக தகவல் வெளியானது. இதனை தடுக்கும் வகையில் விமான நிலையங்களில் அன்புச்செழியனின் போட்டோ மற்றும் விவரங்களைக் கொடுத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

அவரது சொந்த ஊரான மதுரையிலும் போலீசார் முகாமிட்டு தேடி வருகின்றனர். மேலும் அன்புச்செழியனின் செல்போன் எண்ணியையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

English summary
The police are monitoring Anbuchezhiyan at the airport to prevent the escape for the other country. Police monitering Anbuchezhiyan cellphone number also.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil