ராஜ் கமல் பிலிம்ஸ் பெயரில் பல கோடி மோசடி..ஆண்டவருக்கே விபூதி அடித்த இளைஞர்கள்.. நடந்தது என்ன!
சென்னை: கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ள சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
12 வகுப்பு மட்டுமே படித்துள்ள கேரளாவைச் சேர்ந்த புகழேந்தி என்பவரும், தமிழகத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவரும் விருதாசலத்தில் அலுவலகம் ஒன்றை தொடங்கினர்.
அதில், ஸ்டாக் மார்கெட் ஆலோசகராகவும், வர்த்தகம் தொடர்பாக மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்து அதன் மூலம் லாபம் பார்த்து வந்துள்ளனர்.

வசமாக சிக்கினர்: இவர்களின் ஆலோசனைப்படி, ஒருவர் ஸ்டார்க் மார்க்கெட்டில் ரூ.7 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். அவர் மூதலீடு செய்த அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு திடீரென வீழ்ச்சிஅடைந்து பெரும் நஷ்டத்தை சந்தித்தார். இதனால், புகழேந்தி மற்றும் சுதாகரன் இருவருக்கும் கிடுக்குபிடி போட்டு கடுமையாக வசைபாடி உள்ளார். இதனால், இந்த தொழிலை மேலும் தொடரமுடியாமல் போனதால், இருவரும் புதிதாக ஒரு மோசடிக்கு திட்டம்தீட்டினர்.
ராஜ் கமல் பிலிம்ஸ் பெயரில் மோசடி: நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி, அந்த நிறுவனம் தயாரிக்க இருக்கும் சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு நடிகர், நடிகைகள் தேவை என இன்ஸ்டாவில் விளம்பரம் செய்துள்ளனர். இதன் மூலம் இவர்கள் இருவரும் ரூ.10 கோடி வரை மோசடி செய்துள்ளனர்.
வெளிச்சத்திற்கு வந்த மோசடி: இதில் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் மட்டுமில்லாமல் லைகா நிறுவனத்தின் பெயரிலும் விளம்பரம் செய்துள்ளனர். இந்த விளம்பரத்தை பார்த்து சந்தேகம் அடைந்த ஒருவர் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கே நேரடியாக தொடர்பு கொண்டு கேட்ட போது தான், இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கைது செய்த போலீசார்: இதுகுறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சிஈஓ நாராயணன் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து களத்தில் குதித்த குற்றப்பிரிவு போலீசார், நீண்ட தேடுதலுக்கு பிறகு சுதாகர் மற்றும் புகழேந்தியை கைது செய்தனர்.மோசடி செய்த பணத்தையும், பத்திற்கும் மேற்பட்ட செல்போன் மற்றும் லேப்டாப்பையும் பறிமுதல் செய்தனர்.


Click it and Unblock the Notifications











