கம்பியை வளைத்து ஷாருக்கான் வீட்டிற்குள் நுழைந்த இருவர் கைது.. காரணத்தை கேட்டு ஷாக்கான போலீஸ்!
சென்னை : பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் வீட்டிற்குள் கம்பியை வளைத்து, சுவர் ஏறி குதித்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலிவுட் பாட்ஷா, கிங் கான் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவருக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகளவில் ஏராளமான ரசிகர்களை வைத்து இருக்கிறார்.
சினிமா ரசிகர்களின் நாடி துடிப்பை நன்றாக தெரிந்து கொண்டு ஷாருக்கான் அதற்கு ஏற்றார் போல் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான்
ஷாருக்கான் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பதான். இப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரிக்க தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா காவி நிற பிகினி அணிந்திருந்ததால் பெரும் சர்ச்சை எழுந்தது, இந்த பாடலை நீக்க வேண்டும் என்றும், பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று இணையத்தில் பெரும் புயல் கிளம்பியது.

பதான்
கடும் எதிர்ப்புக்கு இடையே பதான் திரைப்படம் ஜனவரி 25ந் தேதி, இந்தி, தமிழ், மொழியில் வெளியானது. ஷாருக்கான் நடித்த ஜூரோ படம் வெளியாகி நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் வெளியானதால், பதான் படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். பதான் படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

சுவர் ஏறி குதித்த இளைஞர்கள்
இந்நிலையில், மும்பையில் அமைந்துள்ள ஷாருக்கானின் மன்னத் வீட்டிற்குள் நுழைய முயன்ற இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் ஷாருக்கான் வீட்டின் கம்பியை வளைத்து, சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளனர். இந்த தகவலை அறிந்த போலீசார் ஷாருக்கான் வீட்டிற்கு விரைந்து வந்து இரண்டு இளைஞர்களை கைது செய்தனர்.

அதிர்ச்சி அடைந்தனர்
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஷாருக்கானின் தீவிர ரசிகர்களான இவர்கள், ஷாருக்கானை பார்க்கும் ஆர்வத்தில் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் நுழைய முயன்றதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவலை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

மனைவி மீது மோசடி வழக்கு
லக்னோவில் நடிகர் ஷாருக் கானின் மனைவி கௌரி கான் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரு தொழிலதிபர் தாக்கல் செய்த மோசடி புகாரில், விளம்பரத்தில் நடிக்க 86 லட்சம் வாங்கிக் கொண்டு கௌரி கான் ஏமாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாருக்கின் வீட்டிற்குள் நுழைய முயற்சித்தவர்களுடன் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











