Thalaivar 170: தடபுடலாக நடந்த தலைவர் 170 பட பூஜை.. படக்குழு வெளியிட்ட புகைப்படம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தின் பூஜை இன்று திருவனந்தபுரத்தில் தடபுடலாக நடைபெற்றது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில், ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், சுனில், மோகன் லால் ஆகியோர் நடித்திருந்தனர்.

அனிருத் இசையில் உலகையே இந்த படம் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த படத்தில் மொத்த வசூல் மட்டும் 650 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: ஜெயிலர் படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெய்பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 170 வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலை படக்குழு வெளியிட்டு வருகிறது.

கதாபாத்திரம்: அதன்படி, மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி,பகத் பாசில் ஆகியோர் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது. மேலும், மல்டி ஸ்டாரர் படமாக உருவாகவுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நல்ல கருத்துள்ள படம்: தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக விமான மூலம் கேரளா சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஜெயிலர் படம் எதிர்பார்க்காததை விட பெரிய வெற்றி பெற்றுள்ளது. எனது 170 வது படத்தை த.செ.ஞானவேல் இயக்குகிறார். இந்த படம் நல்ல கருத்துள்ள பிரம்மாண்டமான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றார்.

தடபுடலான பூஜை : இந்நிலையில் தலைவர் 170 திரைப்படத்தின் பூஜை திருவனந்தபுரத்தில் தடபுடலாக நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குத்துவிளக்கு ஏற்றிவைத்தார். இந்த பூஜையில் ரஜினிகாந்த், ஞானவேல் ராஜா, மஞ்சுவாரியர், ஜிஎம் மோகன், விஜய் டிவி ரக்ஷன் மற்றும் பல தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











