தளபதி 67ல் சமந்தாவா..? இணையத்தில் ட்ரெண்டாகும் போஸ்டர்: உருட்டுனாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

சென்னை: விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான வாரிசு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட் நேற்று வெளியானதில் இருந்தே விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

தளபதி 67ல் எந்தெந்த நடிகர்கள் கமிட் ஆகியுள்ளனர் என படக்குழுவினர் போஸ்டர்கள் வெளியிட்டு அறிவித்த நிலையில், சமந்தாவும் இதில் நடிப்பதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

 சர்ப்ரைஸ் அப்டேட்ஸ்

சர்ப்ரைஸ் அப்டேட்ஸ்

வாரிசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் தற்போது தளபதி 67 படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இதுவரை தளபதி 67 அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்றிலிருந்து அடுத்தடுத்து சர்ப்ரைஸ் ட்ரீட் கிடைத்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்த படக்குழு, அடுத்து காஷ்மீருக்கு சென்றுள்ளது.

 விஜய் சமந்தா கெமிஸ்ட்ரி

விஜய் சமந்தா கெமிஸ்ட்ரி

இந்தப் படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், இயக்குநர்கள் மிஷ்கின், கெளதம் மேனன், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. முன்னதாக தளபதி 67ல் சமந்தாவும் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. விஜய்க்கு வில்லியாக பவர்ஃபுல்லான கேங்ஸ்டர் ரோலில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. தெறி, கத்தி, மெர்சல் படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்த சமந்தாவை, முதன்முறையாக அவருக்கு வில்லியாக நடிப்பதை பார்க்க ரசிகர்கள் காத்திருந்தனர்.

 வெளியான சமந்தா போஸ்டர்

வெளியான சமந்தா போஸ்டர்

நேற்று ஒரு மணி நேரத்துக்கு ஒரு அப்டேட் கொடுத்து அசத்தியது தளபதி 67 டீம். அதன்படி இந்தப் படத்தில் கமிட்டான நடிகர்கள், நடிகைகளின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகின. அதேபோல் இன்று சமந்தாவும் தளபதி 67ல் இணைந்துள்ளதாக ஒரு போஸ்டர் வெளியானது. சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டான இந்த போஸ்டரால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. நேற்றே அப்டேட்கள் வெளியான நிலையில், சமந்தாவின் போஸ்டர் மட்டும் எப்படி இன்று வெளியிடப்பட்டது என கேள்வி எழுந்தது.

 எல்லாம் பொய்யா கோபால்?

எல்லாம் பொய்யா கோபால்?

நேற்று வெளியான போஸ்டர்களைப் போல இதுவும் சமந்தாவின் போட்டோவுடன் வைரலானது. ஆனால் இது தவறான தகவல் எனவும், சமந்தா தளபதி 67ல் கமிட் ஆகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. மேலும், படக்குழு தரப்பில் இருந்தோ, சமந்தாவோ இந்த போஸ்டரை வெளியிடவில்லை எனவும் தெரியவந்துள்ளது. இதனால் குழப்பத்தில் இருந்த ரசிகர்கள் இப்போது தெளிவாகிவிட்டனர். சமந்தா தற்போது சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இதனால் இனிமேலும் தளபதி 67ல் இணைய வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X