மாவீரன் பட்ஜெட் 18 கோடி தான்... ப்ரீ ரிலீஸ் பிஸினஸ் மட்டும் இத்தனை கோடியா?சிவகார்த்திகேயன் கெத்து!

சென்னை: சிவகார்த்திகேயனின் மாவீரன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

மடோன் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகி வரும் மாவீரன் ஃபர்ஸ்ட் சிங்கிள் சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் வெளியானது.

இந்நிலையில், இந்தப் படத்தின் பட்ஜெட், ப்ரீ ரிலீஸ் பிஸினஸ் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.

 மாவீரன் பட்ஜெட்

மாவீரன் பட்ஜெட்

சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். மண்டேலா படத்திற்கு இரண்டு தேசிய விருதுகளை வென்ற மடோன் அஸ்வின், இந்தப் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் 18 கோடி ரூபாய் தான் என சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன் சம்பளம் தவிர்த்து 18 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் மாவீரன், ப்ரீ ரிலீஸ் பிஸினஸில் கெத்து காட்டி வருகிறதாம்.

 100 கோடி பிஸினஸ்

100 கோடி பிஸினஸ்

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் மாவீரன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. இந்தப் பாடல் கொடுத்த வைப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இதனால் இந்தப் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை சன் டிவி தட்டித் தூக்கியது. அதேபோல் ஓடிடி, தியேட்டர் ரைட்ஸ் வாங்கவும் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளதாம். இதுவரை கிடைத்த தகவலின் படி ஓடிடி, சாட்டிலைட், தியேட்டர் ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ் எல்லாம் சேர்த்து 90 கோடி வரை ப்ரீ ரிலீஸ் பிஸினஸ் நடந்துள்ளதாம்.

 கலக்கும் சிவகார்த்திகேயன்

கலக்கும் சிவகார்த்திகேயன்

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகும் மாவீரன், தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் என்பதால், ப்ரீ ரிலீஸ் பிஸினஸும் எதிர்பாராத லாபம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸும், தியேட்டர் ரைட்ஸை ரெட் ஜெயன்ட் நிறுவனமும் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் டான், பிரின்ஸ் திரைப்படங்கள் வெளியாகின. இதில் டான் மட்டும் சக்சஸ் ஆனது, பிரின்ஸ் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை.

 விரைவில் ரிலீஸ் தேதி

விரைவில் ரிலீஸ் தேதி

இதனால், மாவீரன் படத்தின் பாக்ஸ் ஆபிஸில் பாதிப்பு இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால், ப்ரீ ரிலீஸ் பிஸினஸிலேயே 100 கோடி வரை வசூல் செய்துவிட்டது மாவீரன். முன்னதாக மாவீரன் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் மடோன் அஸ்வினுக்கும் இடையே தகராறு என சொல்லப்பட்டன. ஆனால், தற்போது நடக்கும் ப்ரீ ரிலீஸ் பிஸினஸை பார்த்தால், மாவீரன் தரமான ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படம் ரம்ஜான் அல்லது பக்ரீத் ஸ்பெஷலாக ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X