இந்து கடவுளின் குத்தாட்ட நடனம்.. 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' வந்த சிக்கல்.. ஜீக்கு வந்த நோட்டீஸ்!
சென்னை: ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 3' மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியாகும். இதில் நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகை சினேகா, டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள். மணிமேகலை மற்றும் விஜே விஜய் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று செலிப்ரேஷன் ரவுண்ட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதுதான் தற்போது சேனலுக்கு தலைவலியாக மாறி உள்ளது.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வித்தியாசமான தலைப்புகளுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும், தற்போது கிராண்ட் பினாலே நெருங்கிக் கொண்டு இருப்பதால், செலிப்ரேஷன் ரவுண்ட் என்ற பெயரில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடிகர் ரவீனா தாஹா கடவுள்களுடன் இணைந்து டான்ஸ் ஆடுவது போல நடன நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதாவது, சிவன், பெருமாள், முருகர், பிள்ளையார் என அனைத்து கடவுள்களும் நாங்களும் ஆட்டம் போடுறோம் என்று சொல்லிக்கொண்டு டான்ஸ் ஆடினார்கள். அந்த நடனத்தில் கடவுள் வேடம் போட்டவர்கள் இந்த காலத்திற்கு ஏற்றபடி ஸ்டெப் போட்டு அடி இருந்தார்கள்.

டான்ஸ் ஜோடி டான்ஸ்: இந்த வீடியோவை பார்த்த இந்து முன்னணி அமைப்பு, தங்களுடைய டிவிட்டரில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் அவர்களுக்கு டாக், செய்து, ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் இந்து கடவுளை இழிவுபடுத்தும் நோக்கில் நிகழ்த்தியை நடத்தி உள்ளனர். இது பக்தர்களின் மனதை மிகவும் புண்படுத்தி உள்ளது. எனவே தாங்கள் நேரடியாக தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டு இருந்தார்கள். இந்து முன்னணி அமைப்பு ஷேர் செய்த, அந்த பதிவினை பார்த்த அடுத்த அரை மணி நேரத்திலேயே ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஜீ தமிழிக்கு நோட்டீஸ்: அந்த நோட்டீஸில் 12.7.2025 ஆம் தேதி ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி. கேபிள் டிவி விதிமுறைகளுக்கு மீறி ஒளிபரப்பு செய்து இருக்கிறார்கள். எதற்காக அப்படி ஒளிபரப்பினார்கள் என்பதற்கான விளக்கத்தை ஏழு நாட்களுக்குள் அளிக்க வேண்டும், ஏழு நாட்களுக்குள் சரியான விளக்கம் வரவில்லை என்றால் அடுத்தக்கட்டை நடைவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் வந்துள்ளது. இதனால், சேனல் நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது.
தவறான செயல்: இதுகுறித்து,நடிகை சர்மிளா தனது யூடியூப் சேனலில் பேசி உள்ளார். அதில், இந்த ஜனநாயக நாட்டில் அவரவர்களின் விருப்பப்படி அவரவர்கள் விரும்பும் தெய்வத்தை வணங்கக்கூடிய அதிகாரத்தை இந்த அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்து இருக்கிறது. ஆனால், அடுத்தவர்களின் கடவுளை புண்படுத்தக்கூடிய, அவமானப்படுத்த கூடிய உரிமையை அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு கொடுக்கவில்லை. விமர்சனம் செய்யலாம், ஒவ்வொரு மதத்தில் இருக்கும் மூடநம்பிக்கைகளையும், கண்மூடித்தனமான நம்பிக்கைகளையும் விமர்சனம் செய்வதற்கு நமக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால், கடவுள் நம்பிக்கையோ, கடவுளை அவமானப்படுத்தும் வகையில் செயல்படுவதை, ஏற்றுக் கொள்ளவே முடியாது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி இந்த நடனத்தை எடிட் செய்து ஒளிபரப்பி இருக்க வேண்டும். ஏன், அதை ஜீ தமிழ் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.


Click it and Unblock the Notifications











