யார் என்ன சொன்னாலும் பகாசூரன் வெற்றிதான்.. மோகன் ஜிக்கு பல லட்சத்தில் கிப்ட் கொடுத்த தயாரிப்பாளர்!
சென்னை : பகாசூரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு மோகன் ஜிக்கு தயாரிப்பாளர் விலை உயர்ந்த பரிசை கொடுத்துள்ளார்.
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான பகாசூரன் படத்தில், செல்வராகவன், நடராஜ், ராதாரவி, ராஜன், மன்சூர் அலி கான், தர்க்ஷ, கே.ராஜன், கூல் சுரேஷ், சசிலயா ஆகியோர் லீட்ரோலில் நடித்துள்ளனர்.
ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

இயக்குநர் மோகன் ஜி
பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் இயக்குநரான மோகன் ஜி, திரௌபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்களை இயக்கி சர்ச்சையில் சிக்கினார். பட்டியலின மக்களையும், சிறுபான்மையின மதத்தினரையும் இழிவுப்படுத்துவது போல அந்த படத்தில் பல காட்சிகள் இருந்ததால், மோகன் ஜி கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

பகாசூரன்
திரௌபதி, ருத்ரதாண்டவம் படத்தைத் தொடர்ந்து நான்காவதாக பகாசூரன் என்ற படத்தை இயக்கி மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார் மோகன் ஜி. செல் போஃனால், இன்றைய இளைய சமூதாயம் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும், பெண் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அதிரடியாக பல கருத்துக்களை கூறியுள்ளார்.

பிற்போக்குத்தனமான படம்
இந்த படத்தை பார்த்த பல பெண்கள் ஒரு குடும்பத்தின் கௌரவம், மதிப்பு வீட்டில் இருக்கும் பெண்கள் மீது தான் இருக்கிறதா என்றும், பகாசூரன் படத்தைப் பார்க்கும் பெற்றோர் பெண்களை வெளியில் அனுப்பவே பயப்படுவார்கள் என்றும், மிகவும் பிற்போக்குத்தனமாக ஒரு படத்தை மோகன் ஜி எடுத்து இருக்கிறார் என்று பல விதமான கருத்துக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

விலை உயர்ந்த பரிசு
பகாசூரன் படத்திற்கு படுமோசமான விமர்சனங்கள் வந்த போதும், படம் வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனை பகாசூரன் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். அப்போது, தயாரிப்பாளர், மோகன்.ஜிக்கு 5 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த கை கடிகாரத்தை பரிசாக கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மோகன் ஜியின் திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களில் நடித்த ரிச்சர்டு கலந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











