PS 2: பொன்னியின் செல்வன் அரியணையில் அமர ஆசையா..? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்... இதுதான்யா ப்ரோமோஷன்!
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2ம் பாகத்திற்கான ப்ரோமோஷனை அசத்தலாக தொடங்கியுள்ளது லைகா நிறுவனம்.
இன்னும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்கள் களமிறங்காத நிலையில், ரசிகர்களிடம் இருந்தே இதனை தொடங்கியுள்ளது லைகா.

பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷன்
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் அடுத்த மாதம் இறுதியில் வெளியாகிறது. கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் ஃபர்ஸ்ட் பார்ட் ரிலீஸாகும் முன்னர் சென்னை, கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி என பல இடங்களில் இந்தப் படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனால் ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.

ரசிகர்களுக்கான சோழ சிம்மாசனம்
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் மணிரத்னம், ஏஆர் ரஹ்மான், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிளான 'அக நக' பாடல் மட்டுமே இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அதற்கு முன்பாகவே ரசிகர்களுக்கு சோழ சிம்மாசனம் போட்டு பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனை தொடங்கிவிட்டது லைகா.

செல்ஃபி எடுத்து மகிழும் ரசிகர்கள்
அதாவது சென்னையில் உள்ள VR ஷாப்பிங் மாலில் PVR திரையரங்குகள் உள்ளன. அங்கே பொன்னியின் செல்வன் படத்தில் வரும் ராஜராஜ சோழனின் அரியணையை தத்ரூபமாக வடிவமைத்துள்ளது லைகா. அதுமட்டும் இல்லாமல் பிவிஆர் தியேட்டரின் குறிப்பிட்ட ஒருபகுதியை அரண்மனையாகவே மாற்றியுள்ளது லைகா நிறுவனம். அதன்படி அங்கு அமைக்கப்பட்டுள்ள சோழனின் அரியணையில் குழந்தைகளும் ரசிகர்களும் அமர்ந்து செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.

இதுதான்யா ப்ரோமோஷன்
குடும்பம் குடும்பமாக ஏராளமான ரசிகர்கள் அந்த சிம்மாசனத்தில் அமர்ந்து போட்டோ எடுத்து மகிழ்வதை லைகா நிறுவனம் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளது. கையில் வாளுடன் சிம்மாசனத்தில் கம்பீரமாக அவர்கள் அமர்ந்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இன்னும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர்கள் ப்ரோமோஷனில் இறங்காத நிலையில், ரசிகர்கள் இதனை தொடங்கிவிட்டனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சென்னை வீஆர் மாலுக்கு படையெடுத்து வருகின்றனர்.

விரைவில் ட்ரெய்லர் வெளியீட்டு விழா
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி 500 கோடிக்கும் மேல் வசூலித்திருந்தது. இரண்டாம் பாகத்திற்கான பின்னணி இசையமைக்கும் பணியில் ஏஆர் ரஹ்மான் பிஸியாக காணப்படுகிறார். அதனால் விரைவில் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரஜினி, கமல், பாரதிராஜா உட்பட திரையுலக ஜாம்பவான்கள் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











