விஜய் ரசிகை தான் மனைவியா வரணும்னு.. லியோ தியேட்டரில் மோதிரம் மாற்றிக்கொண்ட ஜோடி!

சென்னை: லியோ படம் இன்று வெளியான போது தியேட்டரில் ரசிகர்கள் மத்தியில் ஒரு ஜோடி மோதிரம் மாற்றிக்கொண்டனர்.

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் இன்று வெளியாகி படத்திற்கு நல்ல விமர்சனம் வந்துக்கொண்டு இருக்கிறது.

The Pudukottai couple exchanged rings at the screening of Leo

லியோ படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள், நடிகைகள் இருந்தாலும் ஒன் மேன் ஷோவாக விஜய் தான் மொத்த கதையையும் தூக்கி சுமக்கிறார்.

முன்னணி நடிகர்கள்: வழக்கமாக லோகேஷ் கனகராஜ் படத்தில் ஹீரோயினுக்கு வேலையே இருக்காது. ஆனால், லியோ படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக இருக்கிறது. அவர் சும்மா பெயர் அளவுக்கு வந்துவிட்டு போகாமல் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே போல ஆக்ஷன் கிங் அர்ஜுன், ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

The Pudukottai couple exchanged rings at the screening of Leo

மோதிரம் மாற்றிய ஜோடி: புதுக்கோட்டையில் லியோ படம் பார்க்க வந்த விஜய் ரசிகர் ஒருவர், லியோ படம் தியேட்டரில் திரையிட்ட போது, ரசிகர்கள் முன் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் தீவிர விஜய் ரசிகன், அவருடைய ரசிகை தான் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்பது என் விருப்பம் தற்போது அது நிறைவேறி உள்ளது.

தியேட்டரில் திருமணம்: அண்ணன் விஜய் முன் திருமணம் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், நாங்கள் ஏழை என்பதால் அண்ணன் முன்னாடி எங்களால் போக முடியவில்லை. இதனால், லியோ படம் வெளியாகும் தியேட்டரில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து என் ஆசையை மாவட்ட செயலாளரிடம் சொன்னேன். உடனே அவர்களே வேஷ்டி, சட்டை, புடவை எல்லாம் வாங்கிக்கொடுத்தனர்.

நாளை கோவிலில் திருமணம்: லியோ படம் திரையில் வெளியான போது இருவரும் மாலை மாற்றிக்கொண்டு, மோதிரம் மாற்றிக்கொண்டோம். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. நாளைக்கு எங்களுக்கு கோவிலில் திருமணம் நடைபெற இருக்கிறது அனைவரும் நிச்சயமாக வரவேண்டும் என்று புது மாப்பிள்ளை தெரிவித்துள்ளார். லியோ படம் வெளியான போது மோதிரம் மாற்றிக்கொண்ட இந்த ஜோடியை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X