Raja Saab Box office: படம் மொக்கனு யார் சொன்னது.. தி ராஜா சாப் படத்தின் வசூல்!

சென்னை: இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனனன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்த 'தி ராஜா சாப்' படம் நேற்று முன்தினம் ஜனவர் 9ந் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பாகுபலி படத்தின் மூலம் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த பிரபாஸ் நீண்ட நாட்களுக்குபிறகு ஜாலியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹாரர் பேண்டசி ஜானரில் வெளியாகி உள்ள இப்படத்தில், தாய், தந்தை இல்லாமல் அனாதையாக பாட்டியின் அரவணைப்பில் இருக்கிறார் பிரபாஸ். அந்த பாட்டி எப்போதுமே தொலைந்து போன கணவர் பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறார். பாட்டி எல்லா விஷயமும் மறந்து போனாலும், தன் கணவர் பற்றிய எந்த விஷயத்தையும் அவர் மறக்கவில்லை. பாட்டிக்காக அவரை தேடி பிரபாஸ் கிளம்புகிறார்.

Prabhas The Raja Saab Review
Photo Credit:

தி ராஜா சாப் : அப்போது தான் சஞ்சய் தத் தான் தாத்தா என்கிற உண்மையும், அவர் ஒரு மாந்திரிகவாதி, பணத்தை திருடுபவர் என்றெல்லாம் தெரியவருகிறது. மறு பக்கம் சமுத்திரகனியும் சஞ்சய் தத் தேடி வருகிறார். இந்த நேரத்தில் தான் அரண்மனை ஒன்றுக்குள் செல்ல, அங்கு இருக்கும் பேயிடம் சிக்கி சொல்கிறார் பிரபாஸ். பிறகு என்ன ஆனது என்பதை நகைச்சுவையாக கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குநர் மாருதி. நீண்ட நாட்களுக்கு பிறகு பிரபாசை மகிழ்ச்சியான கதாபாத்திரத்தில் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாக தெரிவித்தனர். மேலும், பிரபாஸ் ஒரு மாஸ் நடிகர் அவரை திரையில் பார்த்தாலே போதும் படம் ஓடுதா.. ஓடவில்லையா என்பதெல்லாம் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்றனர்.

படத்தின் வசூல்: இந்நிலையில் 'தி ராஜா சாப்' படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.192.18 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஆனால், படத்தின் தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி தனது ட்விட்டர் பக்கத்தில் எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X