அதெப்படி திமிங்கலம்.. முதல் நாள் 112 கோடி.. 3வது நாள் இவ்ளோ கம்மி.. பிரபாஸ் படம் அல்ட்ரா டிசாஸ்டரா?

சென்னை: இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரிது குமார், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஹாரர் காமெடி படமாக ஜனவரி 9ம் தேதி தி ராஜா சாப் திரைப்படம் வெளியானது. முதல் நாளே படத்துக்கு எதிரான விமர்சனங்கள் தான் அதிகளவில் குவிந்தன.

இயக்குநர் மாருதி படம் நல்லா இல்லைன்னா என் வீட்டுக்கு வந்து திட்டுங்க என அட்ரஸ் எல்லாம் கொடுத்த நிலையில், உன் வீட்டுக்கு வரோம் ரெடியா இரு என ஏகப்பட்ட பிரபாஸ் ரசிகர்களே போஸ்ட்டுகளை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வந்தனர்.

The Raja Saab Day 3 Official box office update arrived and fans trolls its a ultra disaster

இந்நிலையில், தி ராஜாசாப் படத்தின் 3வது நாள் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பை தற்போது பட்க்குழு ரொம்பவே தைரியமாக வெளியிட்டு ரோஸ்ட் ஆகி வருகிறது.

முதல் நாள் வசூல்: பிரபாஸ் படம் என்பதால் குறைந்த பட்ச பட்ஜெட்டே 400 கோடி என்பது பாகுபலி படங்களுக்கு பிறகு ஃபிக்ஸ் ஆகிவிட்டது. சாஹோ, ஆதிபுருஷ் உள்ளிட்ட படங்களின் தோல்விக்கு இடையே சலார் மற்றும் கல்கி 2898 உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற்றன. அதன் காரணமாக ஓபனிங் வசூல் பிரபாஸுக்கு சிறப்பாகவே இருக்கும். ஆனால், படம் வெளியாகி மிகப்பெரிய நெகட்டிவ் விமர்சனத்தை எதிர்கொண்ட நிலையில், 2வது நாளே படத்தின் டிக்கெட் புக்கிங் பலத்த அடி வாங்கி விட்டது.

3வது நாள் அதிகாரப்பூர்வ வசூல்: கடந்த ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளே 186 கோடி வசூல் என அறிவித்து பல்பு வாங்கிய நிலையில், இந்த முறை அதெல்லாம் செய்து மாட்டிக் கொள்ள வேண்டாம் என 2வது நாள் சைலன்ட்டாக இருந்த பீப்பிள் மீடியா ஃபேக்டரி தற்போது 3வது நாள் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டுள்ளனர். முதல் நாள் 112 கோடி வசூல் செய்த பிரபாஸின் ஹாரர் காமெடி படமான தி ராஜாசாப் 3 நாள் முடிவில் அதிகபட்சமாக 183 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதெப்படி திமிங்கலம்: சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பிரபாஸின் தி ராஜாசாப் திரைப்படம் அதிகபட்சமாக 71 கோடி மட்டுமே வசூல் செய்ததா என்கிற கேள்வியும் அப்படியென்றால் படம் அல்ட்ரா டிசாஸ்டர் என தயாரிப்பு நிறுவனமே அறிவித்து விட்டதா என சிரஞ்சீவி ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். சங்கராந்தி விடுமுறை இந்த வாரம் முழுவதும் உள்ள நிலையில், கண்டிப்பாக குறைந்தபட்சம் பிரபாஸ் படம் 300 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X