twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்பீல் பர்க்-ன் ‘தி டெர்மினல்” படத்தின் நிஜ ஹீரோ மரணம்..18 ஆண்டுகள் விமான நிலையத்தில் கைதி வாழ்க்கை

    |

    டாம் ஹேங்க் நடித்து ஸ்பீல் பர்க் இயக்கிய புகழ்பெற்ற படமான தி டெர்மினல் படத்தின் நிஜ நாயகன் பாரீஸ் விமான நிலையத்தில் நேற்று உயிரிழந்தார்.

    பாஸ்போர்ட் விசா ஆவணங்கள் இல்லாமல் வரும் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் நியுயார்க் விமான நிலையத்தில் சிக்கி வெளியே அனுப்ப அனுமதி மறுக்கப்படும் கதைதான் தி டெர்மினல்.

    இந்தப்படத்தில் குடியுரிமை ஆவணங்கள் இல்லாமல், நியூயார்க் செல்ல மறுக்கப்படும் ஹீரோ விமான நிலையத்திலேயே வசிப்பார். அதில் நடக்கும் சுவாரஸ்யங்களே கதை.

    அவதார் தி வே ஆஃப் வாட்டர் ட்ரெய்லர் செய்த சாதனை… ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்டிங்அவதார் தி வே ஆஃப் வாட்டர் ட்ரெய்லர் செய்த சாதனை… ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்டிங்

    ஸ்பீல்பர்க படத்தின் நிஜ நாயகன் உயிரிழந்த சோகம்

    ஸ்பீல்பர்க படத்தின் நிஜ நாயகன் உயிரிழந்த சோகம்

    உலகப்புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஸ்பீல் பர்க் 2004 ஆம் ஆண்டு டாம் ஹேங்கை வைத்து தி.டெர்மினல் என்கிற படத்தை இயக்கி வெளியிட்டார். படத்தின் கதை, காட்சி அமைப்பு நகைச்சுவை கலந்த சோகத்துடன் எடுக்கப்பட்ட விதம் அனைவரையும் கவர்ந்தது. இப்படத்தின் நிஜ நாயகன் 18 ஆண்டுகள் விமான நிலையத்தில் அடைபட்டு இரண்டு நாட்களுக்கு முன் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. படத்தின் கதை இதுதான் குடியுரிமை ஆவணங்கள் சரியாக இல்லாததால் நாட்டுக்கும் திருப்பி அனுப்ப முடியாமல், நியூயார்க் உள்ளும் அனுப்ப முடியாமல் விமான நிலையத்திலேயே சிறைவைக்கப்படுவார் டாம் ஹாங்க். அவரை தீவிரவாதி அளவுக்கு விமான நிலைய ஊழியர்கள் சந்தேகப்படுவார்கள். விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் கடுப்புடனேயே நடப்பார்கள்.

     ஈரானியராக டாம் ஹாங்கின் அற்புதமான நடிப்பு

    ஈரானியராக டாம் ஹாங்கின் அற்புதமான நடிப்பு

    வெள்ளந்தியான உதவும் குணம் கொண்ட நல்ல மனிதரான டாம் ஹாங்க் ஆங்கிலம் தெரியாது. கஷடப்பட்டு அதை கற்றுக்கொள்ள முயற்சிப்பார். விமான நிலைய டிக்கெட் வழங்கும் பிரிவில் உள்ள ஊழியர்கள், துப்புரவு தொழிலாளிகள் என படிப்படியாக பழக ஆரம்பிப்பார்கள். பின்னர் அவரது கதையை தெரிந்து நெருக்கமாகி விடுவார்கள், இதற்கிடையே வருமானத்துக்காக டிராலியை தள்ளிவிட்டால் 0.25 டாலர் கிடைக்கும் அதற்காக தினமும் நூற்றுக்கணக்கான ட்ராலிகளை தள்ளி விட்டு காசு சேர்ப்பார்.

     மனதை வருடும் தி டெர்மினல் படம் நிஜக்கதையா?

    மனதை வருடும் தி டெர்மினல் படம் நிஜக்கதையா?


    அவருக்கு விமான பணிப்பெண் ஒருவர் காதலியாக கிடைப்பார். ஒரு கட்டத்தில் விமான நிலையத்தின் ஒரு அங்கமாகவே டாம் ஹாங் மாறிப்போவார். ஆனாலும் விமான நிலைய அதிகாரி மட்டும் இவரை விரோதமாகவே பார்ப்பார். இப்படியே 2 ஆண்டுகள் ஓடிவிடும். இதில் துப்புரவு தொழிலாளிகள், செக்யூரிட்டி கார்டுகள் அவருக்கு உதவியாக இருந்து கடைசியில் நியூயார்க் செல்ல அனுமதி கிடைத்ததும் தடை போடும் அதிகாரியை மீறி வெளியே தப்பிப்போக உதவுவார்கள். உணர்வுப்பூர்வமான படம் படம் முடிந்து வெகுநேரம் ஆகியும் மனித நேயமும், டாம் ஹாங்கின் வெள்ளந்தியான நடிப்பும் நம் மனதில் நிற்கும்.

     18 ஆண்டுகள் விமான நிலையத்தில் அடைபட்டு கிடந்த வாழ்க்கை

    18 ஆண்டுகள் விமான நிலையத்தில் அடைபட்டு கிடந்த வாழ்க்கை

    இந்தப்படம் ஒரு ஒரிஜினல் மனிதரின் கதை, அவர் உயிரோடு இன்றும் பாரீஸ் விமான நிலையத்தின் உள்ளே கைதி போல் வாழும் ஒரு ஈரானியர். ஈரானிய தந்தைக்கும், பிரிட்டீஷ் பெண்மணிக்கும் பிறந்தவர். பிரிட்டனில் மேற்படிப்பு படித்துவிட்டு நாடு திரும்பியவரை அப்போதைய அதிபர் ஷாவுக்கு எதிராக போராடினார் என அவரது குடியுரிமையை பறித்து அனைத்து ஆவணங்களையும் பறித்து அனுப்பினர். பிரிட்டீஷுக்கு திரும்ப வந்தபோது பாரீஸ் விமான நிலையத்தில் பிடிபட்ட அவரை எந்த ஆவணமும் இல்லாததால் எங்கு அனுப்புவது என அதிகாரிகள் குழம்பி பாரீஸ் விமான நிலையத்திலேயே தங்க வைத்தனர். இப்படி என்பதை அறிந்தபோது ரசிகர்கள் அதிர்ந்துபோயினர். படத்தில் 2 ஆண்டுகள் இருப்பதாக காண்பிப்பார்கள். ஆனால் ஈரானியனரான மெஹ்ரான் கரிமி இருந்தது 18 ஆண்டுகள்.

     ஆட்சியாளர்களின் கொடுமையான புத்தி நாடற்றுப்போன மனிதன்

    ஆட்சியாளர்களின் கொடுமையான புத்தி நாடற்றுப்போன மனிதன்

    18 ஆண்டுகள் ஒரு மனிதன் விமான நிலையத்திற்குள்ளேயே கைதி போல் வசித்தது பெரிய அளவில் பரபரப்பானது. ஈரானியர் மெஹ்ரான் கரிமி தனது வாழ்க்கையை புத்தகமாக எழுதினார். இதை பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்பீல் பர்க் தி டெர்மினல் என்கிற பெயரில் படமாக எடுத்தார். படம் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் 220 மில்லியன் டாலர் வசூலித்து கொடுத்தது. கதையின் நிஜ நாயகன் மெஹ்ரான் கரிமி 1988 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டு வரை 18 ஆண்டுகள் விமான நிலையத்தில் அடைபட்டு கிடந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் பாரீசில் ஒரு இடத்தில் வசித்தார்.

     நாடற்று 34 ஆண்டுகள் அதில் 18 ஆண்டுகள் விமான நிலையத்தில் சோக வாழ்க்கை மரணத்தில் முடிவு

    நாடற்று 34 ஆண்டுகள் அதில் 18 ஆண்டுகள் விமான நிலையத்தில் சோக வாழ்க்கை மரணத்தில் முடிவு

    இந்நிலையில் மீண்டும் விமான நிலையத்திற்கே திரும்ப வந்த அவர் விமான நிலைய டெர்மினல் 2 எஃப்-ல் மீண்டும் வசிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. விமான நிலைய மருத்துவர் வந்து அவரை காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தன்னுடைய 42 வது வயதில் 1988 ஆம் ஆண்டு முதல் 34 ஆண்டுகள் எந்த குற்றமற்ற ஒருவர் நாடற்று திரியும் நிலைக்கு ஈரான் ஆட்சியாளர்களால் தள்ளப்பட்டு 76 அவது வயதில் மரணமடைந்த மெஹ்ரான் கரிமியின் சோக வாழ்க்கை யாருக்குமே வரக்கூடாது.

      English summary
      The real-life hero of Tom Hanks' and Spielburg's hit movie The Terminal died due to cardiach arrest saturday at a Paris airport. The Terminal is the story of a European who arrives without passport and visa documents, gets stuck at New York airport and is refused entry. In this film, the hero, who is denied entry to New York without citizenship documents, lives at the airport. The interesting things that happen in it are the story.
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X