நாளுக்கு நாள் கவர்ச்சி கூடுது.. இவங்கதான் வேண்டும்.. தளபதி 64ல் மாளவிகா மோகனன் இணைந்தது எப்படி?
தளபதி 64 படத்தில் நடிகை மாளவிகா மோகனன் எப்படி இணைந்தார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
சென்னை: தளபதி 64 படத்தில் நடிகை மாளவிகா மோகனன் எப்படி இணைந்தார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
தளபதி 64 படம் பெரிய பட்ஜெட்டில் நிறைய ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களுடன் தயாராகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
அதேபோல் யோகி பாபு இன்னும் சில ஹீரோக்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். அனிரூத் இதற்கு இசை அமைக்கிறார்.

யார் இயக்குகிறார்
இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த நிலையில் தளபதி 64 படத்தில் புதிய வரவாக மாளவிகா மோகனன் இணைந்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்றுதான் வெளியானது.

எப்படி
முதலில் இந்த ரோலில் நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் ஆவதாக இருந்தது. ஆனால் கடைசியில் மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் பேட்ட படத்தில் நடித்து பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் என்ன
ஆனால் இவர் வாய்ப்பிற்கு காரணம், திடீர் என்று இவர் இணையத்தில் வைரலானதுதான் என்கிறார்கள். ஆம் சமீப நாட்களாக இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி போட்டோ போட்டு வந்தார். மிகவும் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டார்.

எப்படி இருந்தார்
பேட்ட படத்தில் இவர் வயதான பெண் போல இருந்தார் என்ற விமர்சனம் இருந்தது. ஆனால் இந்த இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான போட்டோக்கள் மூலம் மாளவிகா பெரிய வைரலானார். அட இவர் என்ன இவ்வளவு அழகாக இருக்கிறார் என்று பலரும் இவரின் போட்டோக்களை ஷேர் செய்ய தொடங்கினார்கள்.

ரசிகர்கள்
இவருக்கு ஒரே வாரத்தில் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது. இதை கருத்தில் கொண்ட படக்குழு தற்போது மாளவிகா மோகனனை படத்தில் எடுத்துள்ளது. இதே படத்தில் ராஷி கண்ணா இணைய வாய்ப்புள்ளது என்றும் செய்திகள் வருகிறது.


Click it and Unblock the Notifications











