எச்சூஸ்மி ரசிகாஸ், இயக்குநர் சிவா ரஜினியை 'அதுக்கு' சந்திக்கலையாம்
சென்னை: ரஜினிகாந்தை இயக்குநர் சிவா எதற்காக சந்தித்தார் என்பது தெரிய வந்துள்ளது.
ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள அவர் மும்பை கிளம்பிச் சென்றுள்ளார்.

முன்னதாக நேற்று இயக்குநர் சிவா ரஜினியை அவரின் போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேல் நீடித்தது.
சிவா ரஜினிக்காக எழுதி வைத்த ஸ்க்ரிப்ட் குறித்து விவரித்ததாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் ரஜினியிடம் ஆசி பெறவே சென்றாராம் சிவா. விஸ்வாசம் படம் வெற்றி பெற்றதையடுத்து ரஜினியை சந்தித்து ஆசி பெற்றார் சிவா என்று ரஜினியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ரஜினி நடித்த பேட்ட படமும், அஜித் நடித்த விஸ்வாசம் படமும் ஒரே நாளில் வெளியானது. சூப்பர் ஸ்டார் படத்துடன் வெளியான போதிலும் விஸ்வாசம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அடுத்தவர்கள் படம் வெற்றி பெற்றால் அதை மனதார பாராட்டும் நல்ல மனிதர் ரஜினிகாந்த். இந்நிலையில் தான் சிவா ரஜினியை சந்தித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் வரும் வரை தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் ரஜினிகாந்த். இந்நிலையில் சிவா அவரை சந்தித்ததால் புதுப்படம் குறித்த விவாதம் என்ற பேச்சு கிளம்பியது.
சிவா, ரஜினி கூட்டணியை எதிர்பார்ப்பதாக பலரும் தெரிவித்த நிலையில் இப்படியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications