அந்த சென்டிமென்ட் முக்கியம்.. ரஜினி படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் வைத்தது ஏன்? இதுதான் காரணம்
சென்னை: இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் வைக்கப்பட்டதற்கான காரணங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்து வருகிறது. இந்த படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதன் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. கிராமத்தை மையமாக வைத்த கதையாக இது தயார் ஆகி வருகிறது.

பெயர் என்ன
இந்த நிலையில் இந்த படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் வைத்ததற்கு காரணம் என்ன என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு முதலில் நிறைய பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. கிராமம் சார்ந்த பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். முக்கியமாக படத்தின் பெயர் சென்டிமெண்டாக இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்து இருக்கிறார்கள்.

எப்படி
அதன்படி கடைசியாக அண்ணாத்த என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர். நடிகர் அஜித்தை வைத்து சிவா நான்கு படங்கள் இயக்கினார். முதல் படத்திற்கு வீரம் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த படம் பெரிய ஹிட் ஆனது. இதனால் அடுத்த படத்திற்கு வியில் ஆரம்பிக்கும் வகையில் வேதாளம் என்று பெயர் வைக்கப்பட்டது. அதன்பின் மீண்டும் விவேகம் என்று பெயர் வைக்கப்பட்டு மூன்றாவது படம் வெளியானது.

அஜித் சென்டிமென்ட்
கடைசியாக விஸ்வாசம் என்று பெயர் வைக்கப்பட்டு நான்காவது படம் வெளியானது. விஸ்வாசம் படமும் பெரிய அளவில் ஹிட் அடித்தது. சிவா இப்படி முதல் எழுத்து சென்டிமென்ட் அதிகம் கொண்டவர். இதனால்தான் ரஜினி படத்திற்கு அண்ணாத்தா என்றும் பெயர் வைத்து இருக்கிறார்கள். ரஜினி நடித்த அண்ணாமலை, அருணாச்சலம் இரண்டு படங்களும் செம ஹிட் அடித்தது.

கடைசி படம்
அபூர்வ ராகங்கள், ஆறில் இருந்து அறுபது வரை, அன்னை ஓர் ஆலயம் என்று எல்லா படமும் ரஜினிக்கு மாஸ் ஹிட் படங்கள். இதனால் அதேபோல் 'அ' சென்டிமென்டில் பெயர் வைக்க வேண்டும் என்று அண்ணாத்த என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர். ஒருவேளை அண்ணாத்த படம் ரஜினியின் கடைசி படமாக இருந்தால், அ வில் தொடங்கி அவரின் சினிமா கெரியர் அவில் முடிந்துவிட்டது என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











