அடப்பாவமே.. இதற்காகத்தான் இன்ஸ்டாகிராமில் இருந்து திடீரென விலகினாரா, அந்த பிரபல 'கண்ணடி' நடிகை?
சென்னை: இன்ஸ்டாகிராமில் இருந்து பிரபல நடிகை விலகியதற்கு இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
Recommended Video
பிரபல மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். 'ஒரு அடார் லவ்' என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
புருவத்தை சுருக்கி, கண்ணடித்தும், விரல்களை துப்பாக்கிபோல் செய்து அதில் முத்தமிட்டு காதலனை சுடுவது போலவும் இவர் நடித்திருந்த காட்சி, பரபரப்பானது.

பேசப்படும் நடிகை
இதன் மூலம் ஒரே நாளில் நாடு முழுவதும் பேசப்படும் நடிகையாக மாறினார் பிரியா வாரியர். ஒரு அடார் லவ் படத்தில் அவர் காட்டிய முக பாவனைகள், அவருக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்று தந்தது. இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. படத்தின் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பு, படத்துக்கு கிடைக்கவில்லை.

சர்ச்சையானது
இதையடுத்து 'ஶ்ரீதேவி பங்களா' என்ற படத்தில் நடித்தார். இது நடிகை ஶ்ரீதேவி இறந்த சில மாதங்களுக்கு பின் உருவானதால், சர்ச்சையானது. இந்தப் படத்தில் ஶ்ரீதேவி பெயரை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியது. அடுத்து, கன்னடத்தில் கிரிக் லவ் ஸ்டோரி, தெலுங்கில் லவ்வர்ஸ் டே ஆகிய படங்களில் நடித்தார், பிரியா.

திடீரென்று விலகினார்
சமூக வலைத்தளங்களில் அவருக்கு ரசிகர்கள் பெருகினர். அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறவர்களின் எண்ணிக்கை 72 லட்சத்தைத் தாண்டியது. இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திடீரென்று விலகினார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் பிரியா வாரியரும் ஒருவர்.

காரணம் ஏதுமில்லை
தனது புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவார். இந்நிலையில் அவர் திடீரென்று தனது கணக்கை, செயலிழக்கச் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி பிரியா வாரியர் தரப்பில் கூறும்போது, இன்ஸ்டாகிராம் கணக்கை மூட, குறிப்பிட்ட காரணம் ஏதுமில்லை. இது தற்காலிக பிரேக்தான்' என்று தெரிவித்தனர்.

அருவருப்பு கருத்து
இந்நிலையில், அவர் இன்ஸ்டாகிராமில் இருந்து விலக, இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. அவர் புகைப்படமோ, வீடியோவோ எது பதிவு செய்தாலும் அருவருப்பான கருத்துக்களையும் மிகவும் ஆபாசமாக கமென்ட்களையும் பலர் பதிவிட்டு வந்துள்ளனர். சிலர் கண்மண் தெரியாமல் அவரை கிண்டலடித்தும் வந்துள்ளனர். இது அதிகமானதை அடுத்தே, அவர் இன்ஸ்டாவில் இருந்து விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











