அஜித் - நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி பிரிவு.. காரணம் பணம்தானா?.. வெளியான சீக்ரெட்
சென்னை: Ajith And Nic Arts Chakravarthy (அஜித் மற்றும் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி) அஜித்துக்கும், நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கும் நடந்த பிரச்னைக்கான காரணம் தெரியவந்திருக்கிறது.
யாருடைய துணையும் இல்லாமல் சினிமாவுக்குள் நுழைந்து விழுந்து எழுந்து தனக்கென தனி சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் அஜித்குமார். அவரது உழைப்பை பார்த்து மிரளாதவர்களே இருக்க முடியாது. மேலும் பல இளம் ஹீரோக்களுக்கு ரோல் மாடலாகவும் திகழ்ந்துவருகிறார் அஜித். யாருடைய துணையும் இல்லாமல் அவர் உள்ளே நுழைந்தாலும் இண்டஸ்ட்ரிக்குள் வந்த பிறகு நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி அவருக்கு துணை நின்றார்.

10க்கும் மேற்பட்ட படங்கள்: அஜித்தின் ராசி, வாலி, வில்லன், வரலாறு, சிட்டிசன், ரெட், முகவரி, ஆஞ்ச்நேயா, ஜீ என பத்துக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர் சக்கரவர்த்தி. இரண்டு பேரும் நெருங்கி பழகியவர்கள். எந்த அளவுக்கு என்றால் சக்கரவர்த்தி சொல்வதை அஜித் அப்படியே கேட்டு செயல்படக்கூடிய அளவுக்கு நெருக்கம். மேலும், அஜித்தை நம்பி பணம் போடலாம் என்ற நம்பிக்கையை பிற தயாரிப்பாளர்களிடம் விதைத்ததும் சக்கரவர்த்தி மட்டும்தான் என பலர் கூறுவதுண்டு.
நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி மரணம்: காலம் செல்ல செல்ல நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி சினிமாவிலிருந்து ஒதுங்கினார். இதற்கிடையே மிக மிக நெருங்கி பழகிவந்த அஜித்தும், நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியும் பேசிக்கொள்வதையே சுத்தமாக நிறுத்தினார்கள். சக்கரவர்த்தியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் சில நாள்களுக்கு முன்பாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வராத அஜித் வலுக்கும் கண்டனங்கள்: நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியின் மரணத்தை கேள்விப்பட்டு அஜித்குமார் நேரில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பைக்கில் அவர் வேர்ல்ட் டூர் சென்றுகொண்டிருக்கிறார். இது ரசிகர்களில் ஒருதரப்பினரை அப்செட் ஆக்கியது. அதுமட்டுமின்றி எவ்வளவுதான் பிரச்னை என்றாலும் தன்னை வளர்த்துவிட்டவர் மரணம் அடைந்ததை தெரிந்து அஜித் வந்திருக்க வேண்டும் அல்லது தனது பி.ஆர்.ஓ மூலம் ஒரு இரங்கலையாவது தெரிவித்திருக்க வேண்டும் எனவும் பேச்சு எழுந்திருக்கிறது.
என்னதான் பிரச்னை: நகமும், சதையுமாக இருந்தவர்களுக்குள் அப்படி என்னதான் பிரச்னை வந்தது என்பது குறித்து யாருக்கும் பெரிதாக தெரியாமல் இருந்தது. தற்போது அதுகுறித்த தகவல் தெரியவந்திருக்கிறது. அதாவது, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்து சக்கரவர்த்தி தயாரித்த வரலாறு படத்தில் இருவருக்கும் பண பிரச்னை ஒன்று ஏற்பட்டிருக்கிறது.

பேச்சுவார்த்தையில் அதனை சரி செய்ய முடியாததால் சக்கரவர்த்தியும் அஜித்தும் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகியிருக்கிறார்கள். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் இரண்டு பேருக்கும் இடையிலான பிரச்னை பேசி சரி செய்யப்பட்டாலும்; அன்றிலிருந்து இருவரும் பேச்சுவார்த்தையை நிறுத்தியிருக்கிறார்கள்.
அஜித் வீட்டில் ரெய்டு: அதுமட்டுமில்லாமல் வில்லன் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் படப்பிடிப்பு ஆரம்பித்த இரண்டாவது நாளிலேயே அஜித் வீட்டிற்கும், சக்கரவர்த்தி வீட்டிற்கும் ரெய்டு வந்ததாம் . அப்போது சக்கரவர்த்தி அஜித்திடம் நீங்கள் இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். படப்பிடிப்பில் கவனம் செலுத்துங்கள் என்று கூறி வில்லன் படத்தின் படப்பிடிப்பை நடத்த தைரியம் சொல்லியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி வில்லன் படம் நடந்துகொண்டிருந்தபோது கே.எஸ்.ரவிக்குமாரிடம் சக்கரவர்த்தி, 'ஜி நீங்க வேணா பாருங்க அஜித் டாப் இடத்துக்கு நிச்சயம் வருவார்' என கூறினாராம். இந்தத் தகவலை கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











