தனுஷ் – வடிவேலு கூட்டணிய எந்தப் படத்துலயாவது பாத்துருக்கீங்களா?: ஏன்னு யாருக்காவது தெரியுமா?

சென்னை: கோலிவுட்டில் டாப் ஸ்டாரான தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படம் வரும் 18ம் தேதி வெளியாகிறது.

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என கலந்துகட்டி கலக்கி வரும் தனுஷ் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஆனால், தனுஷும் வைகைப்புயல் வடிவேலுவும் இதுவரை இணைந்து நடிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் துருவ நட்சத்திரம்

தமிழ் சினிமாவின் துருவ நட்சத்திரம்

'துள்ளுவதோ இளமை' படத்தில் அறிமுகமான தனுஷ், ஆரம்பத்தில் ரொம்பவே தடுமாற்றங்களை சந்தித்தார். 'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை' என சில படங்கள் அவருக்கு நம்பிக்கை கொடுத்தாலும், வெற்றிமாறன் இயக்கிய 'பொல்லாதவன்' சிறப்பான அங்கீகாரத்தைக் கொடுத்தது. அப்போது இருந்து தொடங்கிய தனுஷின் அசுர வளர்ச்சி, இன்று ஹாலிவுட் வரையிலும் வெற்றி நடைபோட்டு வருகிறது.

காமெடியில் வற்றாத வைகைப்புயல்

காமெடியில் வற்றாத வைகைப்புயல்

ஹீரோயிசத்தில் தனுஷ் ஆல்ரவுண்டர் என்றால், இன்னொரு பக்கம் காமெடியில் வடிவேலு ஒரு ரவுண்டு அடித்தார். ரஜினி, விஜய் என உச்ச நட்சத்திரங்களோடு காமெடி கலாட்டா பண்ண வடிவேலு, ஒருசில முன்னணி நடிகர்களோடு தொடர்ந்து பயணிக்க முடியாமலும், இன்னும் சிலருடன் தனது கூட்டணியின் கணக்கைத் தொடங்க முடியாமலும் இருந்து வந்தார். இதனிடையே சில ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்காமல் ரெஸ்ட் மோடில் இருந்தார்.

இணையாத சூப்பர் கூட்டணி

இணையாத சூப்பர் கூட்டணி

இந்நிலையில், நடிப்பு அசுரன் தனுஷும் வைகைப்புயல் வடிவேலுவும் சேர்ந்து ஒருபடம் கூட நடிக்காமல் இருக்கின்றனர். அதிரடியான நடிப்புக்கு பெயர் பெற்ற தனுஷ், காமெடியிலும் அசத்தி எடுப்பார். அப்படி இருக்கையில் தனுஷும் வடிவேலுவும் இணைந்து நடித்தால், செம்ம காமெடி ட்ரீட்டாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், இந்தக் கூட்டணி இணைய வாய்ப்பே இல்லை என சொல்லப்படுகிறது.

படிக்காதவனில் இணைந்து பிரிந்தனர்

படிக்காதவனில் இணைந்து பிரிந்தனர்

பலருக்கும் தெரியாத தகவல் என்னவென்றால், தனுஷும் வடிவேலுவும் 'படிக்காதவன்' படத்தில் சேர்ந்து நடிக்க கமிட் ஆகியிருந்தனர். சுராஜ் இயக்கிய இந்தப் படத்தில் முதலில் விவேக் கேரக்டருக்கு வடிவேலு தான் கமிட் ஆகியிருந்தாராம். ஆனால், முதல் நாள் ஷூட்டிஙில், ஸ்கிரிப்ட்டில் இல்லாத வசனங்களை பேசி, தனுஷுக்கே டிமிக்கிக் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

வீட்டுக்கு பேக்கப் செய்த தனுஷ்

வீட்டுக்கு பேக்கப் செய்த தனுஷ்

அதோடு, தனுஷ் சொன்ன சில ஆலோசனைகளையும் கைப்புள்ளையைப் போல நக்கலாக டீல் செய்துள்ளார் வைகைப்புயல். இதனால் ஷாக்கான தனுஷ், இயக்குநர் சுராஜ்ஜுடன் பேசி முதல் நாளோடு வடிவேலுவை வீட்டுக்கு அனுப்பிவிட்டாராம். அதன்பிறகே விவேக் அந்த கேரக்டரில் கமிட் ஆனதாக சொல்லப்படுகிறது. அன்று முதல் தனது படங்களில் வடிவேலுவுக்கு தனுஷ் வாய்ப்புக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X