சூர்யாவிற்கு இப்படி ஒரு நிலைமையா? கருப்பு ரிலீஸ் தேதி தாமதம்.. காரணம் என்ன தெரியுமா?

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து "சூர்யா 45" திரைப்படத்திற்கு கருப்பு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் திரிஷா, ஸ்வாசிகா, சிவாடா, யோகி பாபு, மலையாள நடிகை இந்திரன்ஸ், மன்சூர் அலிகான் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கருப்பு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப்போவதால், ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கங்குவா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு வெளியானது. 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், மோசமான விமர்சனத்தால், தோல்வியை சந்தித்தது. கங்குவா டத்தை தொடர்ந்து சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா கருப்பு படத்தில் நடித்துள்ளார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மௌனம் பேசியதே, ஆறு படத்திற்கு பிறகு த்ரிஷா இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார்.

RJ Balaji Suriya karuppu
Photo Credit:

கருப்பு ரிலீஸ் தாமதம்: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், அளவான ஒரு பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு அடுத்த அடுத்த கட்டத்திற்கு செல்ல, படத்தின் பட்ஜெட் பல மடங்கு அதிகரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதால், படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகரித்துவிட்டதால், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோகிறது. ஓடிடி விற்பனையை நம்பியே படத்திற்கு தயாரிப்பு நிறுவனம் பணத்தை வாரி செலவு செய்தது. ஆனால், ஓடிடி நிறுவனங்கள் சூர்யாவின் முந்தைய தோல்வி படத்தை கணக்கிட்டு, குறைந்த விலைக்கு கேட்பதால் தயாரிப்பு நிறுவனம் கவலை அடைந்துள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றம்: கங்குவா திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வி அடைந்து ஸ்டுடியோ கிரீன் பெரிய பாதிப்பை சந்தித்த போது, சூர்யா தனது சம்பளத்தை விட்டு கொடுத்தார். ஆனால், அதே போல ஒரு முடிவை சூர்யா மீண்டும் எடுப்பாரா என்பது சந்தேகம் இருக்கும் பட்சத்தில், ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் லாபகரமான ஒரு தொகைக்கு கருப்பு படத்தை ஓடிடி நிறுவனத்திடம் விற்பனை செய்த பின்னரே படத்தை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று பிடிவாதமாக உள்ளது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என காத்திருந்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X