Leo Release - லியோ திரைப்படம் வெளியாவதில் சிக்கல்.. என்ன புதுசு புதுசா வருது?.. இந்த பிரச்னை எப்போ தீருமோ
சென்னை: Leo Release (லியோ ரிலீஸ்) 80 சதவீதம்வரை தயாரிப்பு தரப்பு பங்கு தொகை கேட்பதால் லியோ படம் வெளியாவதில் சிக்கல் நீடிப்பதாக திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கிறது லியோ திரைப்படம். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக அடி வாங்கியதால் இந்தப் படம் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாளை மறுநாள் பான் இந்தியா படமாக ரிலீஸாகவிருக்கிறது.
டிக்கெட் புக்கிங்: லியோ படத்துக்கான டிக்கெட் புக்கிங் சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் தொடங்கியது. டிக்கெட் புக்கிங் தொடங்கியதிலிருந்து ரசிகர்கள் மும்முரமாக டிக்கெட்டுக்களை புக் செய்துவருகின்றனர்.முதல்நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் பெரும்பாலான தியேட்டர்களில் காலி ஆகிவிட்டது.அதேபோல் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள்லும் காலி ஆகிவிட்டதாகவே கூறப்படுகிறது.
சிறப்பு காட்சி: அதேபோல் லியோ படத்துக்கு சிறப்பு காட்சிக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கியது. இருந்தாலும் சிறப்பு காட்சியை அதிகாலை 4 மணிக்கு திரையிடக்கூடாது காலை 9 மணிக்குத்தான் திரையிட வேண்டும் என்று கூறியிருந்தது தமிழ்நாடு அரசு. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடியது.
அனுமதி மறுப்பு: இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது படக்குழு தரப்பில் ரசிகர்களுக்காகத்தான் அதிகாலை சிறப்பு காட்சிக்கான அனுமதி கோருகிறோம் என்று வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதியோ எல்லா காட்சிகளும் ரசிகர்களுக்காகத்தானே என்று கூறி அதிகாலை காட்சிக்கான அனுமதியை மறுத்து தீர்ப்பளித்தார்.மேலும் 7 மணி காட்சி வேண்டுமென்றால் தமிழ்நாடு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் அறிவுறுத்தினார்.

புதிய சிக்கல்: இந்நிலையில் லியோ படத்துக்கு அடுத்த சிக்கல் ஒன்று எழுந்திருக்கிறது. அதாவது 80% வரை தயாரிப்பு தரப்பு பங்குத்தொகை கேட்பதால், தயாரிப்பு தரப்புக்கும் திரையரங்க உரிமையாளர் தரப்புக்கும் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், லியோ திரைப்படத்தை வெளியிடுவதில் தற்போது வரை சிக்கல் நிலவி வருகிறது" என தெரிவித்திருக்கிறார்.
மேலும் முதல் வார வசூலில் 80 சதவீத பங்கை தயாரிப்பாளர் தரப்பு கேட்பதால் லியோவை திரையிட ஏஜிஎஸ், ரோகிணி திரையரங்குகள் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











