கேஜிஎஃப் ஹீரோ யாஷ்க்கு கதை ரெடி… லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் ப்ளான்… இதுவும் லோகி யுனிவர்ஸா?
சென்னை: நான்கே படங்களில் இந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக மாறிவிட்டார் லோகேஷ் கனகராஜ்.
விக்ரம் மெகா வெற்றியை தொடர்ந்து விரைவில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.
இதனையடுத்து கைதி செகண்ட் பார்ட், விக்ரம் 2 என அடுத்தடுத்து படங்கள் இருக்க, இப்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

ப்ளாக் பஸ்டர் விக்ரம்
'மாநகரம்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், முதல் படத்திலேயே தனது முத்திரையை ஆழமாக பதித்துவிட்டார். மேக்கிங், திரைக்கதை என தனக்கான ஒரு உலகத்தை கட்டமைத்துவிட்ட லோகேஷ், அடுத்து கார்த்தியின் நடிப்பில் 'கைதி' படத்தை இயக்கினார். ஹீரோயின் கிடையாது, காதல் இல்லை, குத்துப் பாட்டுக்கு இடமில்லை, ஆனாலும் முழுக்க முழுக்க டார்க் மோட் ஆக்சன் ட்ரீட் கொடுத்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார். அப்படியே மாஸ்டர், விக்ரம் என மேலும் இரண்டு ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்து உச்சம் தொட்டுவிட்டார்.

விரைவில் தளபதி 67
கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா, நரேன், காளிதாஸ் ஜெயராம் என பெரிய நட்சத்திரப் பட்டாளங்களோடு 'விக்ரம்' படத்தை இயக்கினார் லோகேஷ். திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், வசூலில் ருத்ரதாண்டவம் ஆடியது. அதுவரை தமிழ் சினிமாவில் இருந்த அத்தனை வசூலையும் முறியடித்த விக்ரம் புதிய சாதனையை படைத்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இனி நான் இயக்கும் படங்களில் யுனிவர்ஸ் கனெக்டிங் இருக்கும். அதாவது லோகேஷ் யுனிவர்ஸ் என்பதை உருவாக்கியுள்ளேன் எனக் கூறிய லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிப்பில் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.

புதிய கூட்டணி?
விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 67' ஷூட்டிங் இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கி விடும் எனக் கூறப்படுகிறது. மேலும், இது லோகேஷ் யுனிவர்ஸில் இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தளபதி 67க்குப் பிறகு, கார்த்தி நடிக்கும் 'கைதி 2', அடுத்து விக்ரம் செகண்ட் பார்ட் படங்களை லோகேஷ் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இப்போது கேஜிஎஃப் ஹீரோ யாஷுடன் லோகேஷ் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாஷ் நடிக்கும் படத்திற்கான கதையை லோகேஷ் தயார் செய்துவிட்டதாகவும், இதுவும் லோகேஷின் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ராக்கி பாய் ரெடியா?
பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான 'கேஜிஎஃப்' படம் மூலம் பான் இந்தியா சூப்பர் ஸ்டாராக கலக்கி வருகிறார் யாஷ். கேங்ஸ்டர் படங்களுக்காகவே அளவெடுத்து செய்ததைப் போல அம்சமாக இருக்கும் யாஷ், லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி வைத்தால், இன்னும் தரமாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனிடயே, லோகேஷ் - யாஷ் இணையும் படத்தை ஹோம்பலே நிறுவனமே தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனாலும், இன்னும் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











