LEO: லியோ டைட்டிலை விட அதிகம் ட்ரெண்டாகும் ரோலக்ஸ்... லோகி யுனிவர்ஸ் ஸ்டார்ட் அப்?

சென்னை: விஜய்யின் தளபதி 67 டைட்டிலை அசத்தலான ப்ரோமோவுடன் படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்துக்கு லியோ என டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

விக்ரம் படத்தின் ப்ரோமோவை போலவே லியோ டைட்டில் ப்ரோமோவும் வெளியானதால் இது லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே லியோ டைட்டில் அறிவிக்கப்பட்டது முதல் விக்ரம் படத்தில் நடித்திருந்த சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது.

 தளபதி 67 டூ லியோ

தளபதி 67 டூ லியோ

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் காம்போ மீண்டும் இணைந்துள்ளது. முன்னதாக கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான விக்ரம் படத்தை இயக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். விக்ரம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்ததால் அடுத்து இயக்கும் படங்களில் லோகேஷ் சினிமாட்டிக் கான்செப்ட் இருக்கும் என லோகேஷ் அறிவித்திருந்தார். இதனிடையே விஜய்யுடன் லோகேஷ் இணைந்த தளபதி 67 படத்திற்கு லியோ என்ற டைட்டிலை படக்குழு உறுதி செய்துள்ளது.

 ட்ரெண்டிங்கில் வந்த ரோலக்ஸ்

ட்ரெண்டிங்கில் வந்த ரோலக்ஸ்

செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் லியோ என அறிவிக்கப்பட்டதில் இருந்து விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். லியோ டைட்டிலின் ப்ரோமோ வீடியோவும் ட்ரெண்டாகி வருகிறது. முன்னதாக இந்தப் படத்திற்கு குருதி, குருதிப் புனல், கழுகு, ஈகிள் என்றெல்லாம் டைட்டில் வைக்கப்படலாம் என நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது லியோ டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இதனையடுத்து லியோ ஹேஷ்டேக்குடன் ரோலக்ஸும் டிவிட்டரில் தாறுமாறாக ட்ரெண்ட் அடித்து வருகிறது.

 லியோ - ரோலக்ஸ்..?

லியோ - ரோலக்ஸ்..?

கமலின் விக்ரம் படத்திற்கும் டைட்டிலை அறிவிக்கும் போது ப்ரோமோ வெளியிட்டார் லோகேஷ். தற்போது தளபதி 67 டைட்டிலுக்கும் கிட்டத்தட்ட அதே பாணியில் ப்ரோமோ வெளியிட்டு லீட் கொடுத்துள்ளார் லோகேஷ். தனியாக இருக்கும் வீட்டில் விஜய் கூர்வாளுடன் வேட்டைக்கு ரெடியாக இருப்பதாகவும், விக்ரம ப்ரோமோவில் வந்ததுபோன்று முகமூடியுடன் ஏராளமானோர் காரில் வருவதாக லியோ டைட்டில் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனிடையே லியோ விஜய்க்கும் விக்ரம் படத்தில் லோகஸாக வந்த சூர்யாவுக்கும் இடையே கனெக்‌ஷன் இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 லோகி யுனிவர்ஸ் ஸ்டார்ட் அப்?

லோகி யுனிவர்ஸ் ஸ்டார்ட் அப்?

விக்ரம் படத்தின் இறுதியில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் என்ட்ரி கொடுத்த சூர்யா, ஸ்கார்ப்பியன் டாட்டூவுடன் நடித்திருந்தார். இப்போது தளபதி 67 டைட்டில் ப்ரோமோவில் விஜய்க்கு சிங்கம் என்ற ஐடண்ட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தப் படம் கைதி, விக்ரம் தொடர்ச்சியாகவோ அல்லது அதனுடன் தொடர்புடைய மற்றொரு யுனிவர்ஸாகவோ இருக்க வாய்ப்புள்ளது. கைதி படத்தில் நெப்போலியன் என்ற போலீஸ் கேரக்டரில் நடித்திருந்த ஜார்ஜ் மரியன், விக்ரமில் ஏஜெண்ட் டினாவாக நடித்த வசந்தி இருவருமே லியோவில் இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே ரோலக்ஸ் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள், விஜய்யின் லியோ கேரக்டரை விட சூர்யாவின் ரோலக்ஸ் தான் மாஸ் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X