சிம்பு, ஓவியா, அருண் விஜய், ஷ்ருதிஹாசன்.. நட்சத்திரங்கள் கலர்ஃபுல்லாக கலக்கும் ராயல்ஸ் கேலண்டர்!

Recommended Video

Royal Calendar Photoshoot 2020 by karthik srinivasan | Simbhu | Oviya

சென்னை: பிரபல புகைப்படக் கலைஞர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் கேமரா வண்ணத்தில் உருவாகியுள்ளது தி ராயல்ஸ் 2020 கேலண்டர்.

தி ராயல்ஸ் 2020 கேலண்டருக்காக தமிழ் நடிகர்கள், நடிகைகள் என பல நட்சத்திரங்கள் செம்ம கலர்ஃபுல்லாக போஸ் கொடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சிம்பு, ஓவியா, ஷ்ருதிஹாசன், மேகா ஆகாஷ், பிரியா ஆனந்த், அருண் விஜய், விஷ்ணு விஷால், காயத்ரி, நித்தி அகர்வால், நிக்கி கல்ராணி, ரய்சா வில்சன், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத், அதர்வா, ஜீவா என பல பிரபலங்கள் இந்த கேலண்டரை அலங்கரித்துள்ளனர்.

ராஜாவான சிம்பு

கார்த்திக் ஸ்ரீனிவாசனின் தி ராயல்ஸ் 2020 கேலண்டரில் வீர வாளுடன் ராஜாவாக செம்ம கெத்தாக சிம்பு போஸ் கொடுத்துள்ளார். அவரது போட்டோஷூட் வீடியோவும் வைரலாகி வருகிறது.

ரெஜினா கஸாண்ட்ரா

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் நடிகை ரெஜினா கஸாண்ட்ரா பூப்போட்ட கவுனில் ஏஞ்சல் மாதிரி போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரித்து வருகிறார்.

ராஜதந்திரி

கடந்த ஆண்டை போலவே அருண் விஜய்க்கு இந்த ஆண்டும் வரிசைக் கட்டி படங்கள் காத்துக் கிடக்கின்றன. மாஃபியா, சினம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் அருண் விஜய், இந்த கேலண்டர் ஷூட்டில் ராஜதந்திரி போன்ற லுக் கொடுத்து மிரட்டுகிறார்.

பிரியா ஆனந்த்

கார்த்திக் ஸ்ரீனிவாசனின் கேமரா கை வண்ணத்தில் அழகிய குயினாக செம்ம கிளாமராக பிரியா ஆனந்த் போஸ் கொடுத்துள்ளார்.

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்

எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தில் மறுவார்த்தை பேசாமல் ரசிகர்களின் மனங்களை கொள்ளைக் கொண்ட மேகா ஆகாஷ், பூக்கள் மத்தியில் அழகிய போஸ் கொடுத்துள்ளார். ரசிகர்கள் பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் என பாடி வருகின்றனர்.

ராட்சசன்

ராட்சசன் படத்தில் நடிப்பால் மிரட்டிய விஷ்ணு விஷால் எஃப்.ஐ.ஆர் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்து வேற லெவலில் தயாராகி வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட உருக்கமான கடிதம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், எருமை தலை, கத்தி, என ரியல் ராட்சசனாக மாறி அவர் கொடுத்துள்ள கேலண்டர் போஸ் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

பக்கத்து வீட்டு பொண்ணு

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மெல்லிசை, சீதக்காதி என பல விஜய்சேதுபதி படங்களில் நடித்த நடிகை காயத்ரி ரெட் கலர் டிரெஸ்சில் செம்ம அழகாக பக்கத்து வீட்டு பொண்ணு லுக்கில் போஸ் கொடுத்துள்ளார்.

பூமி ஹீரோயின்

ஜெயம் ரவியின் பூமி படத்தில் நாயகியாக நடித்து வரும் டோலிவுட் ஹீரோயின் நித்தி அகர்வாலும் தங்க தேவதையாக ஜொலிக்கும் செம்ம கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார்.

பப்ளி கேர்ள்

தமிழ் சினிமாவின் பப்ளி கேர்ளான நிக்கி கல்ராணி பிங்க் நிற உடையில் பப்ளி பட்டாம்பூச்சி போல ராயல்ஸ் 2020 கேலண்டருக்கு போஸ் கொடுத்துள்ளார்.

போர் வீரன்

கருப்பு நிற உடையில் போர் வீரனாக கையில் ஈட்டி மற்றும் கேடயத்துடன் தனது கட்டுமஸ்த்தான உடலமைப்பை காட்டி பரத் கொடுத்திருக்கும் இந்த லுக் படு மாஸாக இருக்கிறது.

ரியல் ஏஞ்சல்

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு தனது தனி ஸ்டைலை வெளிப்படுத்தி தனக்கான ஒரு ஆர்மியை உருவாக்கிய நடிகை ஓவியாவும் இந்த கேலண்டர் ஷூட்டில் கலந்து கொண்டிருக்கிறார். பிங்க் நிற உடையில், தேவதை போல சிறகுகள் மற்றும் க்ரீடம் வைத்து அவர் கொடுத்திருக்கும் ஏஞ்சல் போஸுக்கு எக்கச்சக்க லைக்குகள் குவிகின்றன.

கில்லர் லுக்

நடிகர் அதர்வா ஓநாயுடன் கேம் ஆஃப் த்ரோன்ஸில் வரும் நடிகர்களை போல செம்ம கில்லர் லுக் கொடுத்து போஸ் கொடுத்துள்ளார்.

தொடையழகி

பிக்பாஸ், பியார் பிரேமா காதல் என கலக்கி வரும் ரைஸா வில்சன் ப்ளூ கலர் டிரெஸ்சில் தொடையழகு மொத்தமும் தெரியும் படி செம்ம செக்ஸியான போஸ் கொடுத்துள்ளார்.

2021

ஸ்பெஷல் இணைப்பாக 2021 கேலண்டருக்காக நடிகை ஷ்ருதிஹாசன் கொடுத்துள்ள பார்பி பொம்மை லுக்கும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X