Don't Miss!
- News
முதல்வர் ஸ்டாலினின் பாசத்தில் இன்று புதிதாய்ப் பிறந்தேன்.. நெகிழ்ந்து நன்றி சொன்ன நாஞ்சில் சம்பத்!
- Finance
அதானி குழும பங்குகள் வரும் நாட்களிலும் சரியுமா.. நிபுணர்கள் என்ன சொல்றாங்க பாருங்க?
- Sports
99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள்
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ரஜினியின் சாதனையை தொட முடியாத ராஜமெளலி... முதலுக்கே மோசம் போன ஆர்ஆர்ஆர்!
டோக்கியோ:
ராஜமெளலி
இயக்கத்தில்
வெளியான
'ஆர்.ஆர்.ஆர்'
திரைப்படம்
ரசிகர்களின்
வரவேற்புடன்
மிகப்
பெரிய
வெற்றிப்
பெற்றது.
ராம்
சரண்,
ஜூனியர்
என்.டி.ஆர்,
ஆலியா
பட்
உள்ளிட்ட
பலர்
'ஆர்.ஆர்.ஆர்'
படத்தில்
நடித்திருந்தனர்.
ஆஸ்கார்
விருதுவிழாவில்
போட்டியிடும்
இந்தத்
திரைப்படம்
ஜப்பான்
நாட்டிலும்
பிரம்மாண்டமாக
வெளியிடப்பட்டது.
ராஜமெளலியின்
ஆர்.ஆர்.ஆர்
நான்
ஈ,
பாகுபலி
பட்ங்கள்
மூலம்
தமிழ்
ரசிகர்களிடம்
பிரபலமானவர்
ராஜமெளலி.
அவரது
இயக்கத்தில்
கடந்த
மார்ச்
மாதம்
வெளியான
ஆர்.ஆர்.ஆர்
பிரம்மாண்டமான
வெற்றியைப்
பெற்றது.
ராம்
சரண்,
ஜூனியர்
என்.டி.ஆர்,
ஆலியா
பட்
உள்ளிட்ட
பலர்
நடித்திருந்த
இந்தப்
படம்,
உலகம்
முழுவதும்
1,200
கோடிக்கும்
மேல்
வசூலித்து
சாதனை
படைத்தது.
ஆர்.ஆர்.ஆர்
படத்தின்
மேக்கிங்கை
ஹாலிவுட்
பிரபலங்கள்
பலரும்
பாராட்டியதோடு,
இந்தப்
படம்
கண்டிப்பாக
ஆஸ்கர்
போட்டியில்
விருது
பெறும்
என
நம்பிக்கைத்
தெரிவித்துள்ளனர்.
ஆர்ஆர்ஆர்
செகண்ட்
பார்ட்
கன்ஃபார்ம்…
அப்போ
மகேஷ்
பாபு
படம்
என்னாச்சு
ராஜமெளலி
காரு?

ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர்
நான் ஈ, பாகுபலி பட்ங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் ராஜமெளலி. அவரது இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான ஆர்.ஆர்.ஆர் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம், உலகம் முழுவதும் 1,200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங்கை ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் பாராட்டியதோடு, இந்தப் படம் கண்டிப்பாக ஆஸ்கர் போட்டியில் விருது பெறும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் வெளியான ஆர்ஆர்ஆர்
திரையரங்குகளைத் தொடர்ந்து ஒன்றுக்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களிலும் வெளியான ஆர்ஆர்ஆர் அங்கும் சாதனைப் படைத்தது. இந்நிலையில், இந்தப் படம் தற்போது ஜப்பான் நாட்டிலும் வெளியாகியுள்ளது. ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 21ம் தேதி வெளியான ஆர்ஆர்ஆர் படத்துக்கு அந்நாட்டு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக ராஜமெளலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் ஜப்பான் சென்றிருந்தனர்.

ரஜினியிடம் வீழ்ந்த ராஜமெளலி
ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான ஆர்.ஆர்.ஆர், படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. முதல் நாளில் மட்டும் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் ரஜினியின் முத்து, ராஜமெளலி இயக்கிய பாகுபலி, பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ ஆகிய படங்கள் தான் ஜப்பானில் அதிகம் வசூல் செய்த படங்களாக இருந்தன. அதனால் அந்த சாதனைகளை ஆர்ஆர்ஆர் திரைப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சாஹோ, பாகுபாலியின் வசூலை தாண்டிய ஆர்.ஆர்.ஆர், முத்துவின் கலெக்ஷனை ஒன்றும் செய்ய முடியவில்லையாம்.

முதலுக்கே மோசமானதா ஆர்.ஆர்.ஆர்?
ரஜினியின் முத்து திரைப்படம் தான் முதன்முதலாக ஜப்பானில் இந்திய படங்களுக்கான மார்கெட்டை பிரம்மாண்டமாக தொடங்கி வைத்தது. சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான முத்து 22 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இதுவரை 20 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாம். ஆர்.ஆர்.ஆர் படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் கோடிக்கணக்கில் செலவு செய்தும், இது குறைவான கலெக்ஷன் என்றே சொல்லப்படுகிறது. மேலும், உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்த ராஜமெளலி, ஜப்பானில் மட்டும் ரஜினியின் முத்து படத்தை வீழத்த முடியாமல் தடுமாறிவிட்டார் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.