அரசுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டாரா..? ஆஸ்கர் விருதுபெற்ற பிரபல நடிகைக்கு 5 மாதம் சிறை..!
தெஹ்ரான்: அரசுக்கு எதிரான பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டதால் ஆஸ்கர் விருது பெற்ற நடிகைக்கு 5 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பிரபல ஈரானிய இயக்குனர் அஸ்கர் பர்ஹாதி இயக்கிய படம், த சேல்ஸ்மேன். சஹாப் ஹூசைனி, தரனேஹ் அலிடூஸ்டி (Taraneh Alidoosti) ஜோடியாக நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு கடந்த 2017- ஆம் ஆண்டு, சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

தரனேஹ் அலிடூஸ்டி
இதையடுத்து, இதில் நாயகியாக நடித்த தரனேஹ் அலிடூஸ்டி, ஈரானில் பிரபலமானார். இயக்குனர் அஸ்கர் பர்ஹாதி, அபவுட் எல்லி, த செபரேசன், த பாஸ்ட், எவரிபடி நோஸ் உட்பட சில சிறந்த படங்களை இயக்கியவர். அவரது த செபரேசன் என்ற படமும் ஆஸ்கர் விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை தரனேஹ் அலிடூஸ்டி, தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

தாக்கும் போலீசார்
அதில் ஈரான் தெரு ஒன்றில், ஹிஜாப் அணியாததற்காக ஒரு பெண்ணை போலீசார் தாக்கும் வீடியோ அது. இந்த வீடியோ வைரலானது. இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்தனர். பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அரசுக்கு எதிரான பிரசார நடவடிக்கைகளை இவர் மேற்கொள்கிறார் என்றும் புகார் கூறப்பட்டது. இந்நிலையில் பெண்களை கட்டாயப்படுத்தி ஹிஜாப் அணிய வைக்கும் நடவடிக்கையை அவர் தொடர்ந்து எதிர்த்து வந்தார்.

குடிமக்கள் அல்ல
இதுபற்றி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த அவர், நாங்கள் குடிமக்கள் அல்ல, கைதிகள் என்று கூறியிருந்தார். பின்னர் அந்தப் பதிவை நீக்கினார். இதையடுத்து அந்த நடிகை மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு 5 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நடிகை தரனேஹ் அலிடூஸ்டி, கடந்த ஜனவரி மாதம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஈரான் அரசை கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.

சிறைதண்டனை
அத்துடன் ஈரானியர்களுக்கு விசா தடை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எடுத்த முடிவுக்கு எதிராகவும் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த சிறைதண்டனை மிரட்டும் செயல் என்று நடிகையின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அரசின் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்த, சமூக வலைத்தளங்களை மக்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் அரசு இந்தச் செயலில் ஈடுபடுகிறது என்று அங்குள்ள பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.


Click it and Unblock the Notifications