பிகில் படத்தில் நடிக்கும்போது கிடைத்த சந்தோஷம் இப்பொழுது எனக்கு கிடைத்துள்ளது-இந்துஜா

Recommended Video

INDHUJA கு GLAMOUR நல்லா வருது | SUPER DUPER MOVIE INTERVIEW | FILMIBEAT TAMIL

சென்னை: பிகில் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தபோது எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேனோ, அதே அளவு சந்தோஷத்தை இப்பொழுது அடைந்துள்ளேன் என்று உதவும் உள்ளங்கள் அமைப்பு நடத்திய ஆனந்த தீபாவளி நிகழ்வில் கலந்துகொண்ட நடிகை இந்துஜா கூறினார்.

மேலும், இந்நிகழ்வில் பங்கேற்ற நடிகை அதுல்யா ரவி, உலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிசெய்து வந்தால், ஆதரவற்றோர் என்று யாருமே இருக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டு பேசினார்.

The same joy that I got when I starred in the film Bigil says Actress Indhuja

உதவும் உள்ளங்கள் என்ற தொண்டு நிறுவனம் வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒன்று திரட்டி அவர்களுக்காக ஆனந்த தீபாவளி என்று நிகழ்வை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் சுமார் 1222 குழந்தைகள் ஆனந்த தீபாவளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நேற்று நடந்த இந்நிகழ்வில் நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து ஆனந்த தீபாவளி கொண்டாடினர்.

நிகழ்வில் நடிகை இந்துஜா பேசியபோது, இந்த வருடம் தீபாவளி கொண்டாட்டமாக தளபதி விஜய் நடித்த பிகில் படம் திரைக்கு வருகிறது. இப்படத்தில் நடிப்பதற்கு என்னை அணுகிய போது நான் எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ, அதே சந்தோஷம் உங்களை இன்று சந்தித்தபோது அடைந்தேன்.

மேலும் இந்த அமைப்பின் நிறுவனர் சங்கர் மகாதேவன், மற்றும் இந்த அமைப்பின் நலம் விரும்பி கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள், என்றார்.

இந்த நிகழ்வில் நடிகை அதுல்யா ரவி பேசியபோது, உலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிசெய்து வந்தால், ஆதரவற்றோர் என்று யாருமே இருக்க மாட்டார்கள். எனவே நம்மால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பாதை வகுக்க வேண்டியது அவசியம், என்றார்.

உதவும் உள்ளங்கள், அமைப்பின் நிறுவனர் சங்கர் மகாதேவன், 22 ஆண்டுகளாக தொடர்ந்து ஆனந்த தீபாவளி நிகழ்வு நடைபெற்று வருகிறது. தெய்வக் குழந்தைகளை மகிழ்வூட்டி அவர்களின் ஒட்டுமொத்த சந்தோஷத்தை வெளிக்கொணர்வது மட்டுமல்லாமல் இதுபோன்ற பிள்ளைகளின் எதிர்கால நல்வாழ்விற்கு கல்வி ஒளி வழங்குவதே இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கம், என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X