கூலி படத்தின் ‘மோனிகா‘ பாடல் வெளியானது.. ரசிகர்களை குஷிப்படுத்திய பூஜா ஹெக்டே!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' படத்தின் முதல் பாடலான 'சிக்கிட்டு வைப்' பாடல் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடலான 'மோனிகா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்தில் நடித்து முடிந்துள்ளார். நாகார்ஜுனா, சத்யராஜ், கன்னட நடிகர் உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் பாங்காக் பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் படம் ஆகஸ்ட் 14ந் தேதி, பான் இந்திய திரைப்படமாக தியேட்டரில் வெளியாக உள்ளது. கூலி படத்திலிருந்து வீடியோ ஒன்றை படக்குழு அண்மையில் வெளியிட்டு இருந்தது. அதில், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா மாஸாக நடந்து செல்ல, பின்னணியில் அரங்கம் அதிரட்டுமே... விசுலு பறக்கட்டுமே என்ற பாடல் இடம் பெற்று இருந்தது. இதில், ரஜினிகாந்த் தளபதி படத்தில் வருவது போல மிகவும் ஸ்மார்ட்டாக இருந்தார்.

Coolie Rajini Lokesh Kanagaraj
Photo Credit:

கூலி: கூலி படத்தின் இறுதிக்கட்ட பணி நடந்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களாகவே படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து படத்தின் முதன் பாடலான 'சிக்கிட்டு வைப்' பாடல் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியானது. அதில், அனிருத் மாஸாக காரில் இருந்து இறங்கி 'முடிச்சிடலாமா' என கேட்டு விட்டு, கை கடிகாரத்தால் செய்த மாலையை கையில் எடுத்து சென்றார். இந்த கிளிம்ஸ் வீடியோவே செம மாஸாக உள்ளது.

மோனிகா பாடல்: கூலி திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் இருக்கும் நிலையில், படத்தின் இரண்டாவது பாடலான 'மோனிகா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த பாடலில் பூஜை ஹெக்டே சிவப்பு நிற உடையில் அட்டகாசமாக ஆட்டம் போட வைத்துள்ளார். விஷ்ணு எடவன் பாடல் வரியில், சுபலாஷினி, அனிருத் ரவிச்சந்தர் மற்றும் அசால் கோலார் ஆகியோர் இந்த பாடலை பாடி உள்ளனர். இணையத்தில் வெளியான இந்த பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது. இப்போதே படத்தின் ப்ரோமோஷன் வேலையை படக்குழு இரண்டு மாதத்திற்கு முன்பே தொடங்கி விட்டது.

ஜெயிலர் 2: அனிருத் இதுவரை சூப்பர் ஸ்டாருக்கு பேட்ட, தர்பார், ஜெயிலர் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதில் வரும் அனைத்தும் பாடல்களும் பெரிய வரவேற்பை பெற்றன. குறிப்பாக ஜெயிலர் படத்தில் 'சூப்பர் ஸ்டாருடா' பாடல் அளவில் பெற்றி பெற்றது. அந்த வரிசையில் கூலி திரைப்படத்தின் பாடல்களும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூலி படத்தை தொடர்ந்து, ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஜெயிலர் படத்தில், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மோகன், சிவராஜ் குமார், நந்தமுரி பாலகிருஷ்ணா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X