சிம்புவுக்கு திருமணமானால்தான் எனக்கு திருமணம்.. சீரியல் நடிகை என்ன இப்படி சொல்லிட்டாங்க?
சென்னை: சிம்பு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் இருக்கிறார். இந்த முறை எண்ணங்களை ஒருமுகப்படுத்தி சிறப்பாக நடித்துவருகிறார். முக்கியமாக சிம்பு ஷூட்டிங்கிற்கு லேட்டாகத்தான் வருவார் என்று அவர் மீது பல வருடங்களாக வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டு இந்த இன்னிங்ஸில் உடைபட்டிருக்கிறது. இப்போது அவர் தக் லைஃப் ஆகிய படத்தில் நடித்துவருகிறார். எஸ்டிஆர் 48 பட ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. இந்தச் சூழலில் சிம்புவின் திருமணம் பற்றி சீரியல் நடிகை பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
கோலிவுட்டின் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் சிம்பு. சிறு வயதிலிருந்தே நடித்துவரும் அவர் நடிப்பு, இயக்கம், பாடல்கள் எழுதுவது, பாடுவது, இசையமைப்பது என பல ஜானர்களில் தன்னை நிரூபித்திருக்கிறார். அதேசமயம் சிம்பு ஷூட்டிங்கிற்கு ஒழுங்காக வரமாட்டார் என்ற குற்றச்சாட்டு மட்டும் அவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டுக்கொண்டே வந்தது. அதன் காரணமாக சில பிரச்னைகளையும் அவர் சந்தித்திருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது. ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கவும் செய்தார்.

இரண்டாவது இன்னிங்ஸ்: நிலைமை இப்படி இருக்க அவருக்கு உடல் எடை கூடியது; அவரது எண்ணமும் ஆன்மீகம் பக்கம் ஒதுங்கியது. முக்கியமாக இரண்டு காதல் தோல்விகளையும் சந்தித்தார். அதனால்தான் அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கினார் என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து உடல் எடையை குறைத்து, எண்ணங்களை ஒருமுகப்படுத்தி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார். அதன்படி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். ஆனால் படம் சரியாக போகவில்லை.
தொடர் ஹிட்: அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்தில் சிம்புவை பார்த்த ரசிகர்கள் அட நம்ம விண்டேஜ் சிம்பு கிடைத்துவிட்டார் ப்பா என்று மகிழ்ச்சியில் திளைத்தனர். அந்தப் படத்துக்கு பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த வெந்து தணிந்தது காடு படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தொடர்ந்து நடித்த பத்து தல படம் தோல்வியை சந்தித்தாலும் சிம்புவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.
தக் லைஃப்: பத்து தல படத்துக்கு பிறகு அவர் இப்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். இவற்றில் தக் லைஃப் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. எஸ்டிஆர் 48 ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்த இரண்டு படங்களுமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் எஸ்டிஆர் ரசிகர்கள்.
சிம்பு திருமணம்: இதற்கிடையே சிம்புவுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. இரண்டு காதல் தோல்விகளை சந்தித்த அவர்; அதற்கு பிறகு காதலும் செய்யவில்லை. அதேசமயம் சிம்புவுக்கு விரைவில் திருமணம் என்று மாதத்துக்கு ஒரு முறை தகவல் பரவும். ஆனால் அந்தத் தகவல் வெறும் வதந்தி என்று பின்னர் உறுதியாகும். இதனால் சிம்பு எப்போது திருமணம் செய்துகொள்வார் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
சீரியல் நடிகை சொன்னது: இந்நிலையில் நாச்சியார்புரம், கல்யாணம் முதல் காதல்வரை, சின்னத்தம்பி ஆகிய சீரியல்களில் நடித்திருக்கும் ரேமா அசோக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், 'சிம்புவுக்கு எப்போது திருமணம் நடக்கிறதோ அப்போதுதான் எனக்கும் திருமணம் நடக்கும்' என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்போது அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











