கை கோர்க்கும் இரு "குடி"காரர்கள்..!

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் கே செல்வா இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அஷ்ரஹாசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.

By Rajeswari

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் கே செல்வா இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அஷ்ரஹாசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.

பிக்பாஸ் ஒரு பக்கம், மக்கள் நீதி மய்யம் ஒரு பக்கமென்று, ஒரே பிஸியாக இருக்கிறார் நடிகர் கமல் ஹாசன். தன் மகள் அஷ்ரா ஹாசன் மற்றும் நடிகர் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தை தயாரிக்கிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.

The shooting of actors Kamal and Vikram in the film started yesterday

கமல்ஹாசனின் உதவி இயக்குனரான ராஜேஷ் கே செல்வா, இதற்கு முன்னதாக கமலை வைத்து தூங்காநகரம் படத்தை இயக்கினார். மேலும் தற்போது வெளியான விஸ்வரூபம் 2 படத்திலும் அவருடன் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குநர் ராஜேஷ் கே செல்வா, நடிகர் விக்ரமை வைத்து புதிதாக ஒரு படம் இயக்கவுள்ளார், அந்தப் படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் கமல்ஹாசனின் இளையமகள் அஷ்ரா ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் அறிவிப்பை ஏற்கனவே அறிவித்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. மேலும் இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

ஓகே இரு "குடி"காரர்கள் கை கோர்க்கிறார்கள்.. அட பரமக்குடியைச் சொன்னோம் பயந்துடாதீங்க.. கமலுக்கும், விக்ரமுக்கும் சொந்த ஊர் பரமக்குடி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X