வாடிவாசலை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.. அப்செட் ஆன தயாரிப்பாளர்.. மீண்டும் அந்த தேதி மாற்றம்
சென்னை: விடுதலை 2 படத்தின் வெற்றிக்கு பிறகு வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை இயக்குவதாக தகவல் வெளியானது. ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது தான். ஆனால், வெற்றிமாறன் விடுதலை, விடுதலை 2 என பிஸியாக இருந்தார். சூர்யாவும் எதற்கும் துணிந்தவன், கங்குவா, ரெட்ரோ என பிஸியாக இருந்து வந்தார். ஆனால், இதில் கலகலப்பை ஏற்படுத்தியிருப்பது தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தான். வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும் தேதியை குறித்து விட்டார். ஆனால், இன்னும் இழுபறியில் தான் இருக்கிறதாம்,.
விடுதலை 2 படத்திற்கு பிறகு வாடிவாசல் படத்தை இயக்குவேன் என வெற்றிமாறன் ஏற்கனவே தெரிவித்தார், அவர் சொன்னது போலவே அடுத்தக்கட்ட வேலையை தொடங்கிவிட்டார். தற்போது சூர்யா ஆர்.ஜே . பாலாஜி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்புகளும் முடிந்து விட்ட நிலையில் டப்பிங் பணிகள் முடிவடையாமல் இருக்கிறதாம். பிரம்மாண்ட செட் அமைத்து பாடல் காட்சிகளும் எடுக்கப்பட்டிருக்கிறது. சூர்யாவும் பிஸியான செடுல்களை முடித்துவிட்டு வாடிவாசலில் இணைய தயராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கலைப்புலி தாணு தந்த அப்டேட்: வாடிவாசல் படம் குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படம் குறித்த அறிவிப்பு வந்ததுமே சூர்யாவின் கெட்டப்புகளை பார்த்து வியந்தனர். வெற்றிமாறன் படங்களில் இது ஒரு மைல்கல் என்றும் தெரிவிக்கப்படுகிறது. படப்பிடிப்புக்காக இரண்டு மாடுகளை வாங்கி சூர்யா தனது சொந்த இல்லத்தில் பிள்ளைகளை போல் பராமரித்து வந்தார். இதற்கு பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. பின்னர் வாடிவாசலில் சூர்யா நிற்பது போன்ற வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தினர். இதுபோன்ற அப்டேட்களுக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கப்படாமலே காலங்கள் சென்றது. ஆனால், இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு எங்கு சென்றாலும் அவரிடம் கேட்கும் முதல் கேள்வி சார் வாடிவாசல் எப்போ தொடங்குகிறீர்கள். வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு எப்போது என சூர்யாவின் ரசிகர்கள் நச்சரிக்க தொடங்கிவிட்டனர்.
இதனால் பொறுமை இழந்த அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்குவதாக அறிவித்தார். கடந்த பொங்கல் தினத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் நாளாக வெற்றிமாறனும், சூர்யாவும் கலைப்புலி தாணுவை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகின. அதன் பிறகு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. விடுதலை 2 படமும் வெளியாகி ஹிட் ஆகிவிட்டது. இதன் பிறகு வெற்றிமாறன் வாடிவாசலுக்கான ப்ரீ புரொடக்சன் பணிகளும் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நம்பிக்கையில் கலைப்புலி தாணு வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் என அறிவித்தார். தற்போது அதிலும் மாற்றம் வந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது?: வாடிவாசல் படத்திற்கான தொழில்நுட்ப பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கான இசை பணியை தொடங்கிவிட்டதாகவும் சமீபத்தில் தெரிவித்தார். வெற்றிமாறனும் அதை உறுதிப்படுத்தினார். இந்த நிலையில், வாடிவாசல் படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள் முழுமையாக நிறையவடையாமல் இருக்கிறதாம். இதற்காக நாட்கள் கடந்துகொண்டே செல்வதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் வெற்றிமாறன் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தெரிவித்திருக்கிறாராம். இதுவரை மவுனம் காத்த கலைப்புலி மறுபடியும் தேதி மாறி போவதால் சிக்கலில் மாட்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அடிக்கடி தேதி மாற்றம்: இதுவரை இல்லாத அளவிற்கு அதிக முறை படப்பிடிப்பு அல்லது தேதி அடிக்கடி மாற்றி அறிவிக்கப்பட்டது வாடிவாசல் படத்திற்குதானாம். தமிழ் சினிமாவில் தேதியை மாற்றி அறிவிப்பதில் ரெக்கார்டு படைத்து விட்டதாக நெட்டிசன்கள் சினிமா விமர்சகர்கள் கலாய்க்க தொடங்கி விட்டனர். மேலும், வாடிவாசல் படத்திற்காக வாங்கப்பட்ட மாடுகளுக்கே வயதாகிவிட்டது. இப்போது அது கிழட்டு மாடுகளாக மாறிவிட்டன. எப்பாது தான் வாடிவாசல் படத்தை தொடங்குவீர்கள் என கிண்டலாக பேச தொடங்கி விட்டனர்.


Click it and Unblock the Notifications











