நம்மூர் காஞ்சனா இந்தியில் மிரட்டுவரா ? ஷூட்டிங் முடிஞ்சிடுச்சாம்...தயாரிப்பாளர் தகவல்
நம்மூர் காஞ்சனா மிரட்டுவரா இந்தியில்? ஷூட்டிங் முடிஞ்சிடுச்சாம்!
சென்னை: 'காஞ்சனா' படத்தின் இந்தி ரீமேக் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக அதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ராகவா லாரன்ஸ் இயக்கி, தயாரித்து நடித்த படம், காஞ்சனா. கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், சூப்பர் ஹிட்டானது.
இதில் சரத்குமார், லட்சுமி ராய், கோவை சரளா, தேவதர்ஷினி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம், இந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.
அமிதாப் பச்சன்
இதில் அக்ஷய்குமார் ஹீரோ. கியாரா அத்வானி ஹீரோயின். தமிழில் இயக்கிய ராகவா லாரன்ஸ், இந்தி ரீமேக்கையும் இயக்குகிறார். இந்திக்காக கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தமிழில் திருநங்கை கேரக்டரில் சரத்குமார் நடித்திருந்தார். இந்தியில் அந்த கேரக்டரில் அமிதாப் பச்சன் நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது.

இயக்கப் போவதில்லை
இப்போது அக்ஷய் குமாரே நடித்துள்ளார். அவரது தோற்றம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, ராகவா லாரன்ஸுக்கு தெரியாமலேயே படத் தயாரிப்பாளர் வெளியிட்டார். இதை எதிர்பார்க்காத லாரன்ஸ், தன்னை அவமானப்படுத்தி விட்டதாகவும் இனி இந்தப் படத்தை இயக்கப் போவதில்லை என்றும் அறிவித்தார்.

திருநங்கை
பின்னர் தயாரிப்பாளர் வந்து பேசியதை அடுத்து சமாதானம் ஆனார். படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் அக்ஷய் குமார், நடிகர் ராகவா லாரன்ஸ் டிரஸ்ட்டுக்கு ரூ.1.5 கோடியை அளித்துள்ளார். திருநங்கைகளுக்கு வீடு கட்டுவதற்காக அவர் இந்த நன்கொடையை வழங்கினார்.

ஷூட்டிங் முடிந்தது
இந்நிலையில் லக்ஷ்மி பாம் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷபினா கான் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது இன்ஸ்டாகிராமில், படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. ஒவ்வொருவருக்கும் நன்றி. 22.05.2020-ல் தியேட்டரில் சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார். படத்தை குட் பிலிம்ஸ், பாக்ஸ்டார் ஸ்டூடியோஸ், துஷார் கபூர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











