துணிவு பட ஷூட்டிங்கை பார்க்க அலைமோதிய மக்கள்..முகமூடியுடன் இருப்பது அஜித்தா?ஏமாந்த ரசிகர்கள்!

சென்னை : அஜித்குமார் நடிக்கும் துணிவு பட ஷூட்டிங்கை பார்க்க அண்ணாசாலையில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் 3வது முறையாக ஹெச்.வினோத்துடன் கைகோர்த்துள்ளார். இப்படத்திற்கு துணிவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். அவரைத் தவிர சார்பட்டா பரம்பரை படத்தில் கலக்கிய ஜான் கொக்கென், வீரா, யோகிபாபு, மகாநதி சங்கர் போன்ற பலர் நடித்து வருகின்றனர்.

அஜித் 61

அஜித் 61

அஜித்தின் 61வது படப்பிடிப்பு மார்ச் மாதம் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டி, விசாகப்பட்டினம், பாங்காக் ஆகிய இடங்களில் நடந்தது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக பாங்காக்கில் நடைபெற்றது. இப்படத்தின் கதை வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டது என்பதால், பேங்க் போல செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

துணிவு

துணிவு

க்ரைம் த்ரில்லர் பாணியில் படம் உருவாகி உள்ள இப்படத்தில் அஜித் இரண்டு வேடத்தில் நடிப்பதாக கூறுப்படுகிறது. நீண்ட நாட்களாக ஏகே 61வது படம் குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், கையில் துப்பாக்கியோடு அஜித் மாஸாக இருக்கும் புகைப்படத்தோடு கூடிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு படத்தின் டைட்டிலை அறிவித்தது.

சென்னையில் ஷூட்டிங்

சென்னையில் ஷூட்டிங்

இந்நிலையில், இன்று முதல் சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி பில்டிங் முன் துணிவு படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அதில் அஜித், மஞ்சு வாரியர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இருவரும் முகமூடி அணிந்து கொண்டு தீயணைப்பு வாகனத்தின் மீது அமர்ந்திருக்கிறார்கள். சென்னையில் நடைபெறும் ஷூட்டிங்கில் அஜித் கலந்துகொண்டுள்ளதை அறிந்த ரசிகர்கள், அதிகளவில் அங்கு கூடியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஏமாந்த ரசிகர்கள்

ஏமாந்த ரசிகர்கள்

அந்த வீடியோவில் அஜித், மஞ்சு வாரியர் முகமூடி அணிந்து கொண்டு கெத்தாக இருக்கிறார்கள். அஜித்தின் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் இந்த வீடியோவை டிராண்டாக்கி வருகின்றனர். அந்த பகுதியில் மக்கள் கூட்டம் கூடியதால், அங்கு வந்த காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். ஆனால், அஜித் பாங்காக்கில் ஷூட்டிங்கை முடித்து விட்டு, தற்போது தாய்லாந்தில் தன்னுடைய உலக பைக் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதனால், துணிவு படத்தில் சில விடுபட்ட காட்சிகளை டூப் போட்டு எச் வினோத் எடுத்து வருகிறார். முகமுடி அணிந்திருப்பவரை அஜித் என நினைத்து ரசிகர்கள் ஏமாந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X