‘வாரிசு‘ படப்பிடிப்புக்கு வந்த சிக்கல்..எந்த நேரத்திலும் ஷூட்டிங் நிறுத்தப்படலாம்!

சென்னை : விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பை நிறுத்தவேண்டும் என எதிர்ப்பு எழுந்துள்ளது.

நடிகர் விஜய் தற்போது தனது 66வது படத்திற்காக இயக்குநர் வம்சி பைடிப்பள்ளியுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு வாரிசு என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து வாரிசு படம் சம்பந்தமான ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.

வாரிசு

வாரிசு

வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா உட்பட பலர் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அடுத்த ஷெட்யூல் சென்னையில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது தயாரிப்பாளர்கள் அந்த திட்டத்தை மாற்றி ஹைதராபாத்தில் போடப்பட்டிருந்த செட்டில் படப்பிடிப்பை முடித்தனர்.

ஆந்திராவில் வேலைநிறுத்தம்

ஆந்திராவில் வேலைநிறுத்தம்

ஆந்திராவில் தற்போது பெரிய திரைப்படங்களை தவிர தெலுங்கில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் பெரும் நஷ்டம் அடைந்தன. படங்கள் திரையரங்குகளில் வெளியான 3 வாரங்களிலேயே ஓடிடியில் வெளியாவதுதான் இந்த பிரச்னைக்கு காரணம் என தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர். இதனால் ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகி 10 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாக வேண்டும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் திரைப்படங்களின் தயாரிப்பு பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளனர்.

தில் ராஜு விளக்கம்

தில் ராஜு விளக்கம்

ஆனால் வாரிசு படம் தமிழ் படம் என்பதால் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நேற்றிலிருந்து எந்த தடையும் இல்லாமல் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளரான தில் ராஜு ஸ்டிரைக்கை மீறி படப்பிடிப்பை நடத்துவதற்கு மற்ற தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள தில் ராஜூ, வாரிசு திரைப்படம் இருமொழிகளில் வெளியாகும் தெலுங்கு படம் அல்ல. அது அசல் தமிழ் படம் தான். இப்படம் தமிழில் எடுக்கப்பட்டு வருகிறது. பின்னர் வரசுடு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தெலுங்கில் வெளியிடப்பட உள்ளதாக கூறியிருந்தார்.

எந்த நேரத்தில் நிறுத்தப்படலாம்

எந்த நேரத்தில் நிறுத்தப்படலாம்

ஆனால், தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் அவரது விளக்கத்தை ஏற்க மறுத்து, வாரிசு ஒரு தமிழ் படம் அல்ல. இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்படும் திரைப்படம் என்பதால், தெலுங்கு திரைப்பட துறையின் வேலை நிறுத்தம் இந்தப் படத்திற்கும் பொருந்தும் என கூறியுள்ளனர். இதனால், வாரிசு படத்தின் படப்பிடிப்பு எந்த நேரத்திலும் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X