twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இணையத்தை கலக்கும் ‘டிஜிகா‘ குறும்படம்... 100% காமெடிக்கு கேரண்டீ !

    |

    சென்னை : தற்போதுள்ள சூழ்நிலையில் ஒவ்வொரு வேலைகளும் ஆன்லைன் மயமாகி அதை அனைவரும் பயன்படுத்தியும் வருகின்றனர்.

    இவ்வாறு ஒவ்வொன்றாக டிஜிட்டல் மயமாக மாறிக்கொண்டே போனால் இன்னும் 10 ஆண்டில் நாம் அனைவரும் சாதாரணமாகவே எவ்வாறு இருப்போம் என சிரிக்கும் வகையிலும் சிந்திக்கும் வகையிலும் இக்குறும்படம் உருவாகியிருக்கிறது.

    எதிர்காலத்தில் டிஜிட்டல் முறையில் கல்யாணம் நடைபெறும் நிலைமை வந்தால் அது எவ்வாறெல்லாம் இருக்கும் என இந்த குறும்படத்தின் மூலம் சொல்லி இப்படக்குழு அசத்தியிருக்கிறது.

    அட.. இந்த நடிகரும் வெப் சீரிஸில் நடிக்க போகிறாராம்.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!அட.. இந்த நடிகரும் வெப் சீரிஸில் நடிக்க போகிறாராம்.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஆன்லைன்களில் மூலம்

    ஆன்லைன்களில் மூலம்

    மக்கள் தொழில்நுட்பம் என்ற பெயரில் நாளுக்கு நாள் தங்களது அன்றாட பணிகளை கூட ஆன்லைன்களில் மூலம் நிறைவேற்றி வரும் காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இந்த நிலையில் கரண்ட் பில், பணம் பரிவர்த்தனை, மருந்து மாத்திரைகள் மற்றும் துணிமணிகள் என அனைத்தும் சகட்டு மேனிக்கு எல்லாவற்றையும் இருந்த இடத்திலிருந்தே ஆன்லைனில் பெற்றுக்கொள்ள வசதிகள் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் உருவாக்கப்பட்டு அனைத்திலும் டிஜிட்டல் மயமாகி வருகிறது.

    "டிஜிகா" குறும்படம்

    ஒரு இளம் படக்குழு குறும்படம் ஒன்றை இயக்கி உள்ளது. அதில் இன்னும் 10 ஆண்டுகள் கழித்து திருமணத்திற்கு பெண் பார்க்க போகும்போது எவ்வாறெல்லாம் டிஜிட்டல் மயமாகி இருப்போம் என்பதை காமெடி கலந்து சிந்திக்கும் வகையில் இந்த படக்குழு "டிஜிகா" குறும்படத்தை உருவாக்கியுள்ளது.

    வித்யாசமான காட்சியை

    வித்யாசமான காட்சியை

    மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு பெண் பார்க்க பெண் வீட்டிற்கு செல்வார்கள் என்ற ஒரு எளிமையான கதையை கையில் எடுத்துக்கொண்டு, குறும்படம் ஆரம்பிக்கும் பொழுதே சாப்பாடு ஆர்டர் செய்யும் ஒருவர் அதை ஊட்டி விடுவதற்கும் சேர்த்து ஆர்டர் செய்திருப்பார். என ஆரம்பத்திலேயே வித்யாசமான காட்சியை வைத்து இயக்குனர் எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறார்.

    ஆன்லைன் அனிதா

    ஆன்லைன் அனிதா

    மாப்பிள்ளை தான் ஒரு ஆன்லைன் ஃபுட் டெலிவரி கம்பெனி சாப்பாட்டுடன் சேர்த்து ஊட்டி விடுவது என வித்தியாசமான வசதிகளை அறிமுகப்படுத்தி தற்பொழுது கம்பெனியின் முதலாளியாக இருப்பதாக சொல்லும் மாப்பிள்ளை, பெண் என்ன செய்கிறார் என கேட்க பெண்ணின் அப்பா பெண் தங்கியிருக்கும் அறையிலேயே தான் அவர் பிறந்தார், பின் ஆன்லைனிலேயே படித்தார், ஆன்லைனிலேயே வேலை செய்தார் மேலும் அவருக்கு ஆன்லைன் அனிதா என பெயர்மாற்றமும் விரைவில் செய்ய உள்ளதாக கலகலப்பான வசனங்களுடன் இந்த குறும்படம் ஆரம்பிக்கிறது.

    படிப்புகளையும் வேலைகளையும்

    படிப்புகளையும் வேலைகளையும்

    இவ்வாறு ஆரம்பிக்கும் கதை இவர்களைச் சுற்றி இருக்கும் அனைவரும் யூடியூப், மீம் கிரியேடர்ஸ் என ஆன்லைன் சம்பந்தப்பட்ட படிப்புகளையும் வேலைகளையும் செய்து வருவதாக மணமகன் வீட்டார் சொல்கின்றனர். இதில் முக்கியமாக மணமகன் வீட்டார் வரதட்சணையாக கேட்கும் ஒரு சில விஷயங்கள் தான் இந்த படத்தில் மிகப்பெரிய ஹைலைட்.

    தங்களுக்கு தேவையான பொருட்கள்

    தங்களுக்கு தேவையான பொருட்கள்

    மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் வரதட்சணையாக ஆப்பிள் போன், ஆப்பிள் டெக்ஸ்டாப், எப்போதும் வெளியில் சென்றுவர கால் டாக்சி உடன் தங்களது பேடிஎம் அக்கவுண்ட் கணக்கை இணைத்து தரச்சொல்லி கேட்பது, மேலும் திருமண பத்திரிக்கையை யூடியூபில் வீடியோவாக பதிவேற்றம் செய்து அதன் டிஸ்கிரிப்ஷனில் யாரெல்லாம் மணமக்களுக்கு பரிசுப் பொருள்கள் தர விரும்புகிறார்களோ, அதை தங்களுக்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை அதை அவர்கள் தேர்வு செய்து அந்த டிஸ்கிரிப்ஷனில் குறிப்பிட பரிசு பொருள் தர விரும்புவார்கள் மணவீட்டார் கூறியிருக்கும் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம், மற்றும் மொய் பணமாக வைப்பவர்கள் திருமண பத்திரிக்கை வீடியோவின் கீழ் கூகுள்பே நம்பரை கொடுத்து அதில் நேரடியாக மொய் பணம் வைத்துக் கொள்ளலாம்.

    ஃபுட் கூப்பன்

    ஃபுட் கூப்பன்

    எல்லாவற்றையும் டிஜிட்டல் மயமாக பேசிக்கொண்டிருக்கும் மணமகன் வீட்டாரிடம் பெண் வீட்டார் திருமணத்திற்கு வருபவர்களுக்கு உணவு பரிமாறுவதை பற்றி பேச்சு எடுக்கும் போது அதற்கு மணமகன் வீட்டார், திருமணத்திற்கு வரும் அனைத்து உறவினர்களுக்கும் ஃபுட் கூப்பன் கொடுத்துவிடலாம் அதை வைத்துக்கொண்டு அவர்களுக்கு என்ன வேணுமோ அதை ஆர்டர் செய்து விருப்பம்போல சாப்பிட்டுக் கொள்ளட்டும்.

    ஷேரிட் மூலம்

    ஷேரிட் மூலம்

    என தனது டிஜிட்டல் புரட்சியை சாப்பாடு வரையிலும் கொண்டுசென்று ஆகமொத்தம் மொத்த திருமணத்தையும் ஆன்லைனிலேயே என சொல்ல கடைசியாக திருமண வீட்டார் இருவரும் அவர்களது நிச்சயதார்த்த தாம்பூலத்தை ஷேரிட் மூலம் மாற்றிக்கொள்வது இயக்குனரின் வித்தியாசமான சிந்தனையின் உச்சகட்டம் எனவே சொல்லலாம்.

    2030ஆம் ஆண்டு நடக்கும்

    2030ஆம் ஆண்டு நடக்கும்

    2030ஆம் ஆண்டு நடக்கும் டிஜிட்டல் கல்யாணங்கள் எவ்வாறு நடக்கும் என்பதை "டிஜிகா" என்ற ஒரு குறும்படத்தின் வாயிலாக நம் கண்முன்னே இந்த படக்குழு கொண்டு வந்துள்ளது.

    இசை மரியா ஜெரால்ட்

    இசை மரியா ஜெரால்ட்

    வித்தியாசமாக உருவாகியுள்ள இந்த குறும்படத்தை கல்யாணராமன், பாடி பாஸ்கர் உள்ளிட்ட காமெடி குறும்படங்களை இயக்கிய இயக்குனர் மீரா மகதி இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர்களாக ரியாஸ், பாலாஜி சிவமணி, சந்தானம், லிங்கேஷ், வினு அரவிந்த், திவ்யா, வர்ஷா, எழில், தீபன் சக்கரவர்த்தி உள்ளிட்ட பல முகங்கள் இந்த படத்தில் நடித்திருக்க, இதற்கு மரியா ஜெரால்ட் இசையமைத்துள்ளார்.

    இப்போதே கணித்து

    இப்போதே கணித்து

    முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் பத்து ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெறும் கல்யாணம் எவ்வாறு நடக்குமென இப்போதே கணித்து அதை ரசிக்கும் வகையில் காமெடியுடன் கலந்து கொடுத்திருக்கும் "டிஜிகா" படக்குழு பலரது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் பெற்று இந்த குறும்படம் பலராலும் பார்க்கப்பட்டு இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.

    English summary
    The short film 'Digica' is going viral on the internet
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X