ஏஆர் ரஹ்மானின் தெறிக்கும் BGMல் மாஸ் காட்டும் பத்து தல டீசர்... சிம்புவின் கேங்ஸ்டர் ஆட்டம் ஆரம்பம்

சென்னை: சிம்புவின் பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

கிருஷ்ணா இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் சிம்பு நடித்துள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில், பத்து தல படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

 சிம்புவின் பத்து தல டீசர்

சிம்புவின் பத்து தல டீசர்

மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து பத்து தல படத்தில் நடித்துள்ளார் சிம்பு. கிருஷ்ணா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்தாண்டு டிசம்பர் 14ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், அப்போது ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் பத்து தல ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரோடக்‌ஷன்ஸ் வேலைகள் தொடங்கின. இதனைத் தொடர்ந்து தற்போது பத்து தல டீசர் வெளியாகியுள்ளது.

 A R R-ன் தெறிக்கும் பிஜிஎம்

A R R-ன் தெறிக்கும் பிஜிஎம்

பத்து தல டீசர் வெளியீடு குறித்து நேற்று மாலை படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது வெளியான பத்து தல டீசர் யாருமே எதிர்பார்க்காத வகையில் தரமான சம்பவம் செய்து வருகிறது. ஏஆர் ரஹ்மானின் தெறிக்கவிடும் பின்னணி இசையில் சிம்பு ரியல் கேங்ஸ்டராக மரண மாஸ் காட்டியுள்ளார். ஏற்கனவே பத்து தல டீசரில் ஏஆர் ரஹ்மான் இசையில் மிரட்டியுள்ளதாக சிம்பு ட்வீட் செய்திருந்தார். தற்போது அது உண்மை தான் என்பதை இந்த டீசர் நிரூபித்துள்ளது.

 சிம்புவின் ஏஜிஆர் பஞ்ச்

சிம்புவின் ஏஜிஆர் பஞ்ச்

ஏஆர் ரஹ்மானின் பிஜிஎம் மட்டும் இல்லாமல் சிம்புவின் பஞ்ச் வசனங்களும் ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றன. குமரி கண்டத்துல ஏஜிஆரோட ஆட்சி நடக்குறது எல்லாருக்கும் தெரியும்ல, மண்ண ஆள்றவனுக்கு தான் எல்லை... அத அள்ளுற எனக்கு அது இல்ல... நான் படி ஏறி மேல வந்தவன் இல்ல, எதிரிகளை மிதிச்சேறி மேல வந்தவன்... என்னால எத்தனை பேரு வாழ்ந்தாங்கன்னும் தெரியாது... செத்தாங்கன்னும் தெரியாது என ஒவ்வொரு வசனத்திலும் பங்கம் செய்துள்ளார் சிம்பு.

 ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

வெந்து தணிந்தது காடு படத்தில் கேங்ஸ்டர் டீமில் இருக்கும் அடியாளாக நடித்திருந்தார் சிம்பு. ஆனால், பத்து தல படத்தில் ரியலாகவே கேங்ஸ்டராக கலங்கடித்துள்ளார். டீசரிலேயே ரசிகர்களை பதறவைத்துள்ள சிம்பு, படத்தில் இன்னும் தரமாக சம்பவம் செய்திருப்பார் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். சிம்பு - ஏஆர் ரஹ்மான் காம்போ மீண்டும் ஒருமுறை அமர்க்களமான ட்ரீட் கொடுத்துள்ளது எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

விரைவில் ட்ரெய்லர் ரிலீஸ்

முன்னதாக பத்து தல படத்தில் இருந்து, நம்ம சத்தம் என்ற முதல் பாடல் வெளியாகி ஹிட் அடித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இப்போது டீசரும் வெளியாகியுள்ளது. அதேபோல், விரைவில் பத்து தல ட்ரெய்லரும் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கன்னடத்தில் சிவ ராஜ்குமார் நடிப்பில் ஹிட்டான முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காகதான் பத்து தல உருவாகியுள்ளது.

ட்விட்டரில் ட்ரெண்டிங்

ட்விட்டரில் ட்ரெண்டிங்

கிருஷ்ணா இயக்கியுள்ள பத்து தல படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், தற்போது வெளியான பத்து தல டீசர் டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது. டீசரில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக இருப்பதால், படத்திலும் தரமான சம்பவங்கள் இருக்கும் என எதிர்பார்க்க வைத்துள்ளது பத்து தல.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X