ராயனின் அசுர வசூல் சாதனை... 25 மில்லியன் பார்வைகளை கடந்த 'வாட்டர் பாக்கெட்' பாடல்!

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் கடந்த 26 ஆம் தேதி வெளியானது. ஏ ஆர் ரகுமான் இசையில் எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் என பல நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைபெரும் பலமாக இருந்த நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற நீ இருக்குறியே ஓலை கொட்டாயா... பாடல் இணையத்தில் டிரெண்டாகி இருக்கிறது.

ராயன் படத்தை தனுஷ் இயக்கிய நடித்தால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெருமளவில் இருந்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ராயன், முதல் நாளிலேயே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும், இரண்டாம் பாதி முழுக்க அதிரடி, ரத்தம், வன்முறை காட்சிகள் இருந்ததால், அது ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்தது.

Raayan Dhanush Water Packet song

நடிகர் தனுஷ்: தனது குடும்பத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அண்ணன் ரோலில் ஒரு நிறைவான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தனுஷ். இந்த படத்தில் ரத்தம், வெட்டு, குத்து என ஒரே வன்முறையான இருப்பதாகவும், ப பாண்டி போல ஒரு படத்தை எடுத்த தனுஷ், இப்படி வன்முறை வெறியாட்டமான படத்தை ஏன் எடுத்தார் என பல கமெண்டுகள் வந்தன. ஆனால், அவை அனைத்தையும் தாண்டி படம் கணிசமான வசூலை அள்ளியது. படம் வெற்றி பெற்றதை, படக்குழுவினருக்கு தனுஷ் விருந்து வைத்தார்.

இணையத்தில் டிரெண்டிங்: ராயன் படத்திற்கு யானை பலம் போல் இருந்து தாங்கி பிடித்து இசை புயல் ஏஆர் ரஹ்மானின் இசைதான். தற்போது சோசியல் மீடியா ட்ரெண்டிங்காக மாறி இருக்கும் அடங்காத அசுரன் பாடல் இரண்டாம் பாதியை காப்பாற்றி விட்டது. அதிலும் ஏ ஆர் ரகுமானின் குரலில் உசுரே நீ தானே வரிகள் புல்லரிக்க செய்து விட்டது. அதுமட்டுமில்லாமல் 'நீ இருக்குறியே ஓலை கொட்டாயா’ பாடலுக்கு இணையத்தில் பல பிரபலங்களும் ஆட்டம் போட்டு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். டிரெண்டாகி இருக்கும் இந்த பாடல் வெளியான 12 நாட்களில் யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை சாதனைப்படைத்துள்ளது.

படத்தின் மொத்த வசூல்: ராயன் திரைப்படம் வெளியாகி 24 நாட்களில் உலக அளவில் ரூ 150 கோடியை வசூலித்துள்ளது. படம் வெளியாகி முதல் பத்து நாட்களில், ₹122.75 கோடியையும், அடுத்த இரண்டு நாட்களில் ₹126.75 கோடியை வசூலித்தது. அதேபோல் இந்திய அளவில் 91.40 கோடி வசூல் செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X